திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கே.ஈஸ்வரலிங்கம் (10219) கோயிலுக்குச் செல்வதால் பிரச்சினைகள் பல எளிதில் தீர்கின்றன என்பது நிதர்சனமான உண்மை, அப்படி நிகழ என்ன காரணம்? மந்திரங்கள் பல உறைந்து நிறைந்து உள்ள இறைவனின் உறைவிடம் அது என்பதால் நமக்கு பிரச்சினை தீர நல்வழி காட்டுகிறது. அதோடு அக்கோயிலில் சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய யந்திரங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பது ஒரு காரணம். (10220) மந்திரம் என்பதற்கு என்ன பொருள்? சொல்பவனைக் காப்பது என்று பொருள். (10221) குடமுழுக்கு என்பதற்கு என்ன பொருள்? மந்திரங்களை ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு, குடமுழுக்கு என்று பெயர். (10222) கும்பாபிஷேகத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? வைணவத்தில் சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் அழைப்பர், (10223) கும்பாபிஷேகத்திற்கான விதிகளை எழுதியவர் யார்? வாமதேவ என்கிற வடமொழி நூலாசிரியர். வாமதேவர் (102224) இது பற்றி எதில் எழுதியுள்ளார்? வாமதேச பத்ததியில், (10225) இதில் யார் யாருக்கு கூறுவதாக எழுதப்பட்டுள்ளது? சிவபெருமான் முருகனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. (10226) இதைப்படித்து அறிந்துகொண்டால் என்ன பலன் கிட்டும்? குடமுழுக்கு விழாவினை நேரில் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம். (10227) கும்பாபிஷேக வகைகள் எவை? ஆவர்த்தம், அநாவர்த்தம், அந்தரிதம் (10228) ஆவர்த்தம் என்பது என்ன? இயற்கைச் சீற்றங்களால் சிதிலமடைந்துவிட்ட ஆலய மூர்த்தங்களை சரிசெய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இப்பெயர். (10229) அநாவர்த்தம் என்பது என்ன? தவசிகள், ரிஷிகள், முனிவர்களால் மலைப் பகுதிகளிலிருந்து கல் கொண்டு வரப்பட்டு தெய்வச்சிலை செய்து வழிபடுவது. (10230) அந்தரிதம் என்பது எதனை? பாவிகள், திருடர்கள், உலோபிகளால் சேதப்படுத்தப்பட்ட கோயிலைப் புதிதாக்கி கும்பாபிஷேகத்தை நடத்துவதை. (10231) குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பு யாரை பிரார்த்திக்க வேண்டும்? மகா கணபதியை (10232) விக்னேஸ்வர பூஜை ஏன் செய்யப்படுகிறது? கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படு வதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க. (10233) விக்னேஸ்வர பூஜை என்பது எதனை? மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து பூஜை செய்வதே விக்னேஸ்வர பூஜை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812