செவ்வாய், 1 அக்டோபர், 2013

கொடிமரம்

கே.ஈஸ்வரலிங்கம் (10323) கோயிலுக்கு கொடி மரம் அமைப்பது ஏன்? தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டு இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும். கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும். (10324) கொடி மரம் அமைப்பதால் ஏற்படும் வேறு நன்மை என்ன? கோயிலுக்கு அழகு தரும். (10325) கொடி மரத்தின் தண்டு எப்படி பட்டதாக இருக்க வேண்டும்? வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். (10326) கொடி மரம் எந்த மரங்களில் செய்வது உத்தமம்? சந்தனம், தேதாரு, செண்பகம், வில்வம், மகிழம். (10327) பலா, மா ஆகிய மரங்களில் கொடி மரம் செய்வதால் கிடைக்கும் பயன் எவ்வளவாக இருக்கும்? குறைந்த நன்மையை தருவதால் மத்திம பலன். (10328) கமுகு, பனை, தென்னை முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பதால் எந்தளவு பலன் கிடைக்கும்? மிக மிகக் குறைந்த நன்மையே கிடைக்கும். (10329) கொடி மரம் எத்தனை கணுக்கள் உள்ளதாய் அமைப்பது நல்லது? முப்பத்து மூன்று கணுக்கள் (10330) கொடிக் கம்பத்தின் எத்தனை பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர்? ஐந்தில் ஒரு பாகம். (10331) இதன் அடியிலிருந்து உச்சி வரை எத்தனை பாகமாக்குவார்கள்? ஏழு (10332) கொடி மரத்தை எந்தெந்த வடிவங்களில் அமைப்பர்? சதுர, கோண விருத்த (10333) கொடி மரத்தின் அடிப்பாகம் எந்த வடிவில் இருக்கும்? சதுரமாக (10334) இது எதனை உணர்த்துகிறது? இறைவனின் படைப்புத் தொழிலை (10335) இந்த பாகத்தை என்ன பாகம் என்று கூறுவார்கள்? பிரம்ம பாகம் (10336) பிரம்ம பாகத்துக்கு மேலுள்ள பாகம் எப்படி பட்டதாய் இருக்கும்? எண் கோணமாயிருக்கும் (10337) இது எதனை குறிக்கும்? இறைவனின் காத்தல் தொழிலை (10338) இதனை என்ன பாகம் என்று கூறுவர்? விஷ்ணு (10339) அதற்கு மேல் உள்ள பாகம் எந்த வடிவினதாக இருக்கும்? உருண்ட நீண்டதாக இருக்கும். (10340) இந்த உருண்ட நீண்ட பாகம் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? உருத்திரனை (10341) இது இறைவனின் எந்த தொழிலைக் குறிக்கும்? சங்காரத் தொழிலை (10342) ஆலயத்தில் மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது எது? கொடி மரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812