வியாழன், 18 டிசம்பர், 2014

செவ்வாய் கிரகம்

கே. ஈஸ்வரலிங்கம்
11128) நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் யார்? முருகன் 11129) செவ்வாய்க்கிழமை விரதம் யாருக்கு மிகவும் உகந்தது? முருகனுக்கு 11130) செவ்வாய் விரதம் பற்றி வள்ளலார் கூறியிருப்பது என்ன? செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து உடல் தூய்மை பெற நீராடி திருநீற்றை நீரில் குழைத்து முறைப்படி தலை உச்சி முதல் உடல் எங்கும் தரித்துக்கொண்டு விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும். பின்பு ஸ்ரீ பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜெயித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும். அதன்பின் சூரியனைப் பார்த்து “ஓம் சிவ சூரியாய நம” என்று கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து பரமசிவன், பார்வதி, முருகனை மனத்துக்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜெபம் செய்து 100 கிராம் மிளகினை ஒரு புதுத்துணியில் முடிந்து “ஓம் வைத்தியலிங்கார்ப்பணம்” என்று கூறி ஓரிடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கழைத்து உபசரித்தல் நல்லது. அமுது படைத்து தாம்பூரம் தட்சனை கொடுத்து பின்பு சுத்தமான பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்ந்த உப்பில்லாப் பொங்கல் பொங்கி செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அப்பிரசாரத்தை அரைவயிறு மட்டும் உண்டு அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவத்தியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் படிக்கக் கேட்டு பின்பு ஏதும் உண்ணாமலே இரவு பாய் தலையணை இன்றி வெறும் தரையில் கம்பளம் விரித்து படுத்துறங்க வேண்டும். 11131) செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் போது தவிர்க்க வேண்டியவை எவை? வாசனாதி திரவியங்கள், தாம்பூலம், பெண் சுகம், பெருந்தூக்கம். 11132) அங்காரகன் என்பது யாரை? செவ்வாய் கிரகத்தை 11133) செவ்வாய்க்கு உரிய வேறு பெயர்கள் என்ன? அர்த்தன், அழல். அழலோன், அறிவன், ஆரல், உதிரன். குருதி, குஜன், சேய், செந்தீவண்ணன். மங்களன், வக்கிரன். 11134) கிரகங்களுக்கு எத்தனை தேவதைகள் இருக்கின்றன? இரண்டு 11135) கிரகங்களுக்கு இருக்கின்ற இரு தேவதைகளும் எவை? அதி தேவதை, பிரத்யதி தேவதை 11136) செவ்வாய்க்குரிய அதி தேவதை யார்? பூமாதேவி 11137) செவ்வாய்க்குரிய பிரத்யதி தேவதை யார்? முருகன் 11138) புராண கதைகளின் படி பூமியின் மகன் யார்? செவ்வாய் 11139) செவ்வாய் கிரகம் பற்றி அறிஞர்களின் கருத்து என்ன? பேரழிவுகள் ஏற்பட்ட சமயத்தில் பூமி உருண்டையின் செம்மண் நிலப்பரப்பிலிருந்து உடைந்து சிதறி விழுந்த உருண்டையே செவ்வாய் என்பதே ஆகும். 11140) பூமியிலிருந்து உடைந்து உருவான செவ்வாய்க்குரிய பெயர்கள் என்ன? பெளமன். பூமிபுத்ரன் 11141) செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் என்ற பெயர் எப்படி வந்தது? செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் 11142) ஆலய வழிபாட்டில் செவ்வாய்க்கு எந்த வர்ண துணி சமர்ப்பணம் செய்யப்படுகிறது? சிவப்பு 11143) எந்த நிற மலர்கள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது?. சிவப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812