திங்கள், 10 மே, 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

வைகாசி

6762) வைகாசி மாதத்தை வைணவர்கள் என்ன வென்று போற்றுவார்கள்? மாதவமாதம்

6763) வைகாசி என்பதை வேறு என்னவென்று கூறுவார்கள்?விகாஸம்

6764) விகாஸம் என்றால் என்ன?மலர்ச்சி

6765) வைகாசி விசாகத்தில் உதித்தவர் யார்?முருகப் பெருமான்

6766) வைகாசி மாதத்தில் சிவபெருமானைப் போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம் எது?ரிஷப விரதம்

6767) ரிஷப விரத நாளில் எந்த வடிவில் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும்?ரிஷப வாகனத்தில் அமர்ந்திருக்கும் உமா மகேஸ்வரரான சிவபெருமானை

6768) ரிஷப விரதத்தை யார் கடைப் பிடித்தால் நல்ல பலன் கிட்டும்?வாகனங்கள் வைத்திருப்பவர்களும் புதிய வாகனங்கள் வாங்க விரும்புபவர்களும்

6769) ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து ஐராவதத்தை பெற்றவர் யார்?இந்திரன்

6770) இந்த விரதத்தை கடைப்பிடித்து புஷ்பக விமானத்தை பெற்றவர் யார்?குபேரன்

6771) இந்த விரதத்தை எப்பொழுது கடைப்பிடிக்க வேண்டும்?வைகாசி மாத சுக்ல அஷ்டமி திதியில்

6772) புத்த பகவான் அவதரித்தது எப்பொழுது?வைகாசி பெளர்ணமியன்று

6773) புத்த பகவான் அரச மரத்தடியில் தவமிருந்தபோது ஞானம் பெற்றது எப்பொழுது?வைகாசி பெளர்ணமியில்

6774) அவர் இப்பூவுலகைத் துறந்து மோட்சம் பெற்றது எப்பொழுது?வைகாசிப் பெளர்ணமியில்

6775 தங்கத் தட்டில் அவதரித்தவர் யார்?வியாசர்

6776) வியாசர் தங்கத் தட்டில் அவதரித்த மாதம் எது?வைகாசி

6777) வைகாசி மாதத்தில் அவதரித்த நாயன்மார்கள் யார்?திருஞானசம்பந்தர், சோமாசி மாறனார், நமிநந்தியடிகள், கழற்சிங்கர்

6778) வைகாசி மாதத்தில் அவதரித்த வைணவப் பெரியவர்கள் யார்?நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள்

6779) காஞ்சிப் பெரியவர் பிறந்தது எந்த மாதத்தில்?வைகாசியில்

6780) குருவின் நட்சத்திரம் எது?விசாகம்

6781) விசாகம் எந்த வம்சத்துக்குரிய நட்சத்திரம்?இஷவாகு

6782) இராம - இராவண யுத்தம் எப்பொழுது நடந்ததாக ஸ்ரீமத் இராமாயணம் கூறுகிறது?விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812