திங்கள், 31 மே, 2010

நாகதோஷம்

அறநெறி அறிவு நொடி


கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்,

தமிழர் நற்பணி மன்றம்

6847) நாக பஞ்சமி அன்று விரதம் இருந்து நாகத்தை வழிபட்டால் கிடைக்கும் நன்மை என்ன?

நாக தோஷம் நீங்கும்.

6848) விரத நாளன்று வேறு என்ன செய்யலாம்?

வீட்டு வாசற்படிக்கு அருகில் நாகத்தைப் போல் வரைந்து பூஜை செய்யலாம்.

6849) விரத நாளன்று ஆற்றக்கூடிய வேறு கருமங்கள் என்ன?அன்றைய தினம் நாகர்களான அனந்தன், வாசுகி, குக்ஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்கு பாலன், கார்க் கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் திருப்பெயர்களைச் சொல்லிக்கொண்டே புற்றிற்கு பால் விட்டு வழிபடுவது ஒரு முறையாகும்.

6850) மேற்கு வங்கத்தில் நாகங்கள் எந்தப் பெயரில் பூஜிக்கப்படுகின்றன?

மானசாதேவி

6851) நாக பஞ்சமி விரதம் கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன?

ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் விலகி விடும். திருமணமானவர்களுக்கு நாகதோஷத்தால் புத்திர பாக்கியம் ஏற்படாமலிருந்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். ஏனையோர் இந்த விரதத்தினை மேற்கொள்வதால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமுடனும் வாழ்வார்கள்.

6852) நாகபஞ்சமியை விரதமாகக் கடைப்பிடித்து நாக பூஜை செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

நாகராஜனின் சுலோகத்தை கூறி பலன் பெறலாம்

6853) பாம்புகளை வழிபடுவதை என்னவென்று கூறுவர்?

நாக பூஜை, நாக பஞ்சமி

6854) நாக பூஜை செய்ய மிகவும் உகந்த நாள் எது?

நாக பஞ்சமி அன்று

6855) நாகங்கள் தெய்வங்களாகப் போற்றப்படுவது எந்த காலத்திலிருந்து?

வேத காலத்திலிருந்து

6856) பாம்புகளைப் போற்றி ஆற்றப்படும் சடங்குக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள பெயர் என்ன?

சர்ப்ப பலி

6857) இந்தப் பூவுலகை யார் யார் தாங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்?

அஷ்ட கஜங்களும் என்று சொல்லப்படும் யானைகளும் அஷ்ட நாகங்கள் என்ற எட்டு நாகங்களும்.

6858) அஷ்ட நாகங்களையும் தருக?

ஆதிசேஷன், வாசுகி, தக்ஷகன், திருதராஷ்டிரன், ஐராவதன், கார்க்கோடகன், சங்கண், மாணி

6859) இந்த எட்டு நாகங்களில் முதன்மை பெறுபவன் யார்?ஆதிசேஷன்

6860) மகா விஷ்ணு யார் மேல் பள்ளி கொண்டிருக்கிறார்?ஆதிசேஷன்

6861) நாகராஜனுக்கு உரிய சுலோகத்தைத் தருக?

நாகராஜ மஹாபாகு ஸர்வா பீஷ்ட பலப்ரத நமஸ்கரோமி தேவேச த்ராஹிமாம் கருணாநிதே உமா கோமள ஹஸ்தாப்ய ஸம்பாவித லலாடகம் ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் பஷ்கரஸ்ரஜம்.

1 கருத்து:

  1. எனக்கு நாகதேஷ்சம் இருக்கு ஆனால் சரியான பரிகாரம் தேறியாமல் தடுமறி இருந்த எனக்கு இவ் தகவல் கிடைத்தமைக்கு உங்கள் தலத்துக்கு மிக மிக நன்றி...

    பதிலளிநீக்கு

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812