திங்கள், 10 மே, 2010

அறநெறி அறிவு நொடி

ஈஸ்வரலிங்கம், தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

6782) அட்சய திருதியில் தங்கமா?

கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது

6783) அட்சயம் என்றால் என்ன?

வளருதல்

6784) கெளரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது எப்போது?

அட்சய திருதியன்று

6785) அன்னைக்கு பாதுகாப்பாக மறுநாள் வந்தது யார்?

விநாயகர்

6786) ஸ்ரீ பரசுராமர் அவதரித்தது எப்போது?

அட்சய திருதியன்று

6787) அட்சயதிருதியன்று தோன்றிய யுகம் எது?

கிருத யுகம்

6788) ஸ்ரீ பரசுராமர் விஷ்ணுவின் எத்தனையாவது அவதாரம்?

ஆறாவது அவதாரம்

6789) அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் என்ன?

எப்போதும் குறையாதது

6790) ஏழ்மையில் வாடிய ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர் யார்?

குசேலர்

6791) குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்க வந்தது எப்படி?

ஒரு படி அவலை எடுத்து தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு

6792) அவரது அவலை சாப்பிட்டிபடி கண்ணன் என்ன கூறினார்?

‘அட்சயம்’ என்று

6793) கண்ணன் அட்சயம் என்று கூறியதும் என நடந்தது?

குசேலரின் குடிசை மாளிகையானது. குசேலர் குபேர சம்பத் பெற்றார்.

6794) குசேலருக்கு கண்ணன் அருள் புரிந்தது எப்போது?

அட்சயத் திருதியை அன்று

6795) அட்சயதிருதியைப் பற்றி தருமருக்கு கதை கூறியவர் யார்?

கண்ணபிரான்

6796) கண்ணன் தருமருக்கு கதை கூறியதாக எந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது?

பவிஷ்யோத்ர புராணத்தில்

6797) அட்சயதிருதியை அன்று யாரை பூஜித்தால் சகல செளபாக்கியங்களும் கிட்டும்?

சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ லட்சமி.

6798) அட்சய திருதியன்று பித்ருக்களுக்கும் மறைந்த முன்னோருக்கும் சிரார்த்தம், பூஜை செய்தால் கிடைக்கும் நன்மை என்ன?

பாவ விமோசனம் பெறலாம்.

6799) அட்சய திருமணமான பெண்கள் என்ன செய்யலாம்?

சுமங்கலி பூஜைசெய்து மற்றவர்களுக்கு ஆடை வழங்கலாம்.

6880) அட்சய திருதியில் ஆடை தானம் அளித்தால் கிட்டும் நன்மை என்ன?

மறுபிறவியில் ராஜவாழ்வு கிட்டும்.

6801) அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கியேயாக வேண்டுமா?

அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பண்டங்கள் தானம் செய்தால் திருமணத் தடை அகலும் உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்துகள், அகால மரணம் போன்றவை நடைபெறாது.

கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி?

வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் நகை வாங்குவது என்பது முடியாத காரியம் தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

அழியும் பொருளை வாங்க தம்மிடம் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடுகளிலும் மனதை செலுத்த முன்வர வேண்டும்.

கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது நம் வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812