திங்கள், 14 மார்ச், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(வாஸ்து புராணம்)

8400) இந்து மதத்தில் உள்ள வேதங்கள் எத்தனை?

நான்கு

8401) வாஸ்தோஸ்பதி என்ற சொல் எந்த வேதத்தில் உள்ளது?

ரிக் வேதத்தில்

8402) வாஸ்தோஸ்பதி என்பதன் பொருள் என்ன?

பாதுகாப்பு, மகிழ்ச்சி, வழமை ஆகியவை இந்தப் பிறவியிலும் மற்ற எல்லாப் பிறவியிலும் கொடுக்கக்கூடியது.

8403) வாய்தோஸ்பதி என்பது எந்த மொழி சொல்?

சமஸ்கிருத மொழி

8404) வாஸ்து என்ற சொல் எதில் இருந்து உருவாகி, இருக்கும்?

வாஸ்தோஸ்பதி என்ற சொல்லில் இருந்து

8405) மத்ஸய புராணத்தில் வாஸ்து சாஸ்திர வல்லுநர்களாக எத்தனை பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?

18

8406) 18 வாஸ்து சாஸ்திர வல்லுநகர்களின் பெயர்களையும் தருக.

1.பிருகு 2. அத்ரி 3. விஸ்வகர்மா

4.வசிஷ்டர் 5. மயன் 6. நாரதர்

7.நகுனஜித் 8.விசாலாக்ஷன் 9.புரந்தரன்

10.பிரம்மா 11.குமாரஸ்வாமி 12.நந்தீஸ்வரர்

13.ஸெளனகர் 14.பகர் 15வாசுதேவர்

16.அநிருந்தர் 17. சுக்கிரன் 18. பிருஹஸ் பத

8407) மகாபாரதத்தில் கட்டிட வல்லுநர்களை அழைத்து வாஸ்து சாஸ்திரப்படி எளிதில் எரியக்கூடிய ஒரு மாளிகைக் கட்டித்தரும்படி கூறியவர் யார்?

துரியோதனன்.

8408) வாஸ்து வல்லுனர் மயனைக் கொண்டு பாண்டவருக்காக பிரிக்கப்பட்ட இந்திரபிரஸ்தத்தை மிக நேர்த்தியாக அமைத்து கொடுத்தவர் யார்?

ஸ்ரீ கிருஷ்ணர்

8409) வட மதுராவில் உள்ள மக்களைக் காப்பாற்ற கடலுக்கு நடுவில் துவாரகா என்ற நகரத்தை வாஸ்து சாஸ்திரபடி கட்டியவர் யார்?

ஸ்ரீ கிருஷ்ணர்

8410) இராமாணத்தில் பஞ்சவடி என்னும் இடத்தில் ஆசிரமம் அமைக்கும் குடிலை வாஸ்திரப்படி அமைக்கும் படி கூறியவர் யார்?

இராமன்

8411) யாரை பார்த்து கூறினார்?

இலக்குமணை

8412) சூரியனை நோக்கி கிழக்கு முகமாக அமர்ந்து சிறுநீர் கழிக்கக்கூடாது என்று அறிவுறுத்துபவர் யார்?

ஸ்ரீ இராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812