திங்கள், 7 மார்ச், 2011

அறநெறி அறிவு நொடி

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8394 ஸ்தல விருட்சம் என்றால் என்ன?

அங்குதான் சுவாமியே உருவாகியிருப்பார்.


8395 ஸ்தல விருட்சத்தை வேறு எவ்வாறு கூறலாம்?

ஸ்தலம் உருவாகக் காரணமாக இருப்பது.


8396 ஸ்தல விருட்சத்தைச் சுற்றினால் ஏற்படும் நன்மை என்ன?

கடவுளின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றும் பலன் கிட்டும்.


8397 ஸ்தல விருட்சத்தை எத்தனை முறை வலம் வரவேண்டும்?

எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். ஒருமுறை வந்தாலும்

போதுமானதுதான்.


8398 திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன?

நெல், கரும்பு போன்றவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விளைச்சலை தந்துவிடும். ஆனால் திருமணம் என்பது அனைத்து காலத்திலும் பிரச்சினைகளை சமாளித்து விளைச்சலை கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டு பேசினார்கள் அதேபோல் திருமணமும் காலம் காலமாக பலனை அளிக்கக்கூடிய ஒன்று.

கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.


8399 அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்களையும் தருக

1)அதிபத்தர் 2)அப்பூதியடிகள் 3)அமர்நீதியார் 4)அரிவட்டாயர்

5)ஆனாயர் 6)இசைஞானியர் 7)இடங்கழியார் 8)இயற்பகையார்

9)இளையான்குடி மாறன் 10)உருத்திரபசுபதியார் 11)எறிபத்தர் 12)ஏயர் கோன்கலிக்காமர்

13)ஏனாதி நாதர் 14)ஐயடிகள் காடவர் கோன் 15)கணநாதர்

16)கணம் புல்லர் 17)கண்ணப்பர் 18)கலிக்கம்பர் 19கலியர்

20)கழறிற்றறிவார் 21)கழட்சிங்கர் 22)காரியார் 23)குங்கிலியக்கலயர்

24)காரைக்கால் 25)குலச்சிறையார் 26)கூற்றுவார் 27)கோச்செங்கட்சோழர்

28)போட்புலியார் 29)சடையனார் 30)சண்டேசுரர் 31)சந்தியார்

32)சாக்கியர் 33)சிறுப்புலியார் 34)சிறுத்தொண்டர் 35)சுந்தரர்

36) செருத்துணையார் 37)சோமாசிமாறர் 38)தண்டியடிகள் 39)திருக்குறிப்புத் தொண்டர்

40)திருஞானசம்பந்தர் 41)திருநாவுக்கரசர் 42)திருநாளைபோவார் 43)திருநீலகண்டர்

44)திருநீலகண்டயாழ்பாணர் 45)திருநீலநக்கர் 46)திருமூலர்

47)நமிநந்தியடிகள் 48)நரசிங்க முனையாரையர் 49)நின்ற சீர்நெடுமாறர்

50)நேசர் 51)புகழ்ச்சோழர் 52)புகழ்த்துனையார்

53)பூசலார் 54)பெருமிழவககுரும்பர் 55)மங்கயற்கரசியார்

56)மானக்கஞ்சாறர் 57)முருகர் 58)முனையடவார் 59)மூர்க்கர்

60)மூர்த்தியார் 61)மெய்ப் பொருளார் 62)வாயிலார் 63)விறண்மிண்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812