திங்கள், 21 மார்ச், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



நந்தீஸ்வரர்

8413) சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் யார்?

திருநந்தி தேவர்.

8414) ஆலயங்களில் நந்தி தேவரின் திருவுருவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்?

சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக.

8415) நந்தி என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

எப்பொழுதும் ஆனந்த நிலையில் இருப்பவர்.

8416) சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெறிந்து கொண்டவர் யார்?

நந்திதேவர்.

8417) நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உவதேசத்தை அவரிடமிருந்து பெற்று கொண்டவர் யார்?

சனற்குமாரர்.

8418) சனற்குமாரரிடமிருந்து இந்த உபதேசத்தை பெற்ற கொண்டவர்கள் யார்?

சத்தியஞான தரிசினிகள்.

8419) சத்திஞான தரிசினிகளிடமிருந்து இந்த உபதேசத்தை பெற்றுக்கொண்டவர் யார்?

பரஞ்சோதியார்.

8420) பரஞ்சோதியாரிடமிருந்து உபதேசத்தை பெற்றவர் யார்? மெய்கண்டர்.

8421) சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாக தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்திதேவர் என்பதை விளக்கும் செய்யுள் எது?

“செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து நம் பவமறுக்கு நந்திவானவர்”

8422) நந்தி தேவரை வேறு எவ்வாறு அழைப்பர்?

நந்தீஸ்வரர், நந்திகேஸ்வரர்.

8423) நந்தீஸ்வரர் யாருடைய அம்சமானவர்?

சிவனின்.

8424) இடபம் எனக் கொள்வது எதனை?

நந்தியை

8425) விடை ஏறிய பெருமான் என்பதன் பொருள் என்ன?

தர்மத்தை வாகனமாக்கிய இறைவன்.

8426) இடபம் எப்படி தர்மமாகிறது?

எருது ஒரு தியாகி நெல்லை எமக்களித்து வைக்கோலையும் எமக்களித்து உமியையும் அது ஏற்கின்றது.

8427) நந்தீஸ்வரரை வணங்குவதன் மூலம் என்ன பலனைப் பெறலாம்?

சாரூப, சாயுச்சிய முத்திகளைப் பெறலாம் என்பது சித்தாந்த சாஸ்திரங்களின் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812