செவ்வாய், 15 மே, 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் வாழை 9148) முக்கனிகளும் எவை? வாழை, மா, பலா 9149) முக்கனிகளுள் எல்லா காலங்களிலும் கிடைக்கும் கனி எது? வாழை 9150) முக்கனிகளுள் அதிக பயன்தரக்கூடியது எது? வாழை 9151) தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும் மரம் எது? வாழை 9152) திருமணப் பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் கட்டப்படுவது எது? வாழைமரம் 9153) திருமணப் பந்தலில் எதற்கு அடையாளமாக வாழை மரம் கட்டப்படுகின்றது? வாழை, தன்னை அழித்துக்கொண்டு, பிறருக்கு கனி தருவது போல், தம்பதியர் ஒருவருக்கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். 9154) திருமணப் பந்தலில் வாழை மரம் கட்டுவதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? குடும்ப விருத்திக்காகவும் 9155) வாழையில் பயன்தரக்கூடியவை எவை? இலை, காய், பூ, பட்டை, தண்டு, நார் 9156) ஒரு மரக்கன்றை நட்டால் அதன் குலம் தழைக்கும் வண்ணம் மிளிரக் கூடியது எந்த மரம்? வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது வாழை 9157) சுப காரியங்களில் வாழை மரம் கட்டுவது ஏன்? மனிதன் தலைமை பெற வேண்டும், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு பல வகைகளிலும் பயன்தர வேண்டும். அவன் குலம் வழி வழியாக தழைக்க வேண்டும் என்பதற்காக. 9158) ‘ஆல் போல தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும்’ என்று வாழ்த்துவது யாரை? மணமக்களை 9159) வாழைமரம் கட்டுவதை எதன் புலப்பாடாக கருதலாம்? மணமக்களை ஆல்போல தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும் என்று வாழ்த்தும் நெஞ்சத்தின் புலப்பாடாக வாழை மரம் கட்டுவதை கருத வேண்டும். 9160) திருவிழா நாட்களில் வாழை மரம் கட்டுவதுடன் வேறு என்ன தொங்கவிடப்படும்? மா விலை 9161) மாவிலைக்கும் வாழை இலைக்கும் விஞ்ஞான ரீதியாக உள்ள ஒற்றுமை என்ன? மாவிலைக்கும் வாழை இலைக்கும் காய்ந்து போகும் வரை ஒட்சிசனை வெளியேற்றும் தன்மை உண்டு. 9162) விழாக் காலங்களில் வாழை மரமும் மாவிலை களும் தோரணங்களாக வாயிலிலும் மணப் பந்தலிலும் கட்டும் பழக்கம் எப்படி ஏற்பட்டது? பண்டைய காலங்களில் இன்று போல் மின்சார வசதி கிடையாது அதனால் திருமணக் கூடங்களில் செயற்கைக் காற்றோட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி அற்ற நிலை. அனைவரும் கூடியுள்ள இடத்தில் சுவாசிக்க தேவையான அளவு காற்று வேண்டுமாதலால் ஒட்சிசன் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாதென்றே இவ்வாறு செய்யப்பட்டது. 9163) வாழை இலையை மட்டும் பறித்துக் கட்டினால் என்ன நடக்கும்? விரைவில் வாடிவிடும். 9164) வாழையை ஏன் மரத்தோடு கட்டுகிறார்கள்? இலையை மட்டும் பறித்துக் கட்டினால் விரைவில் வாடிவிடும் என்பதால் ஆகும். 9165) மரத்தோடு சேர்த்துக் கட்டும் போது என்ன நடக்கிறது? தண்டிலுள்ள ஈரப்பதத்தால் வாழை இலை சில நாட்களுக்கு வாடாமல் இருக்கும். சரித்திரத்தில் இடம்பிடித்துள்ள கோலாலம்பூர் கண்ணாடிக் கோயில் ணீலக சரித்திரத்தில் முதல் இடம் பெற்ற கண்ணாடிக் கோவில் கோலாலம்பூரில் ஜோகர் பாருவில் இருக்கிறது. சிங்கப்பூரையும் ஜோகர் பாரு நகரத்தையும் இணைப்பது கடலின் மீது கட்டப்பட்ட பாலம் தான். மலேசியாவில் ஜலன் டெப்ரா என்னும் இடத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயிலை கட்டி முடித்திருக்கிறார்கள். உருண்டை வடிவ உலகில் கண்ணாடி பதிக்கப்பட்ட ஆலயம் மலரும் வண்ணம் அழகுற அமைத்து கண்களை உருளச் செய்தது அதிசயமாகும். இது உலக மக்கள் இந்துவாகப் பிறந்தவர்கள் அனைவரும் மகிழ்வுறும் விசயமாகும். தொடக்கத்தில் சிறிய குடிசையாக இருந்து, கால ஓட்டத்தில் ஜோகூர் பாருவில் அமைந்த மிகப் பெரிய ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட முதல் மலேசியக் கோவில் என்பது சிறப்பம்சம். இந்தக் கோயில் உருவாகியிருப்பது முழுக்க முழுக்க கண்ணாடியால் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயமே! கோயிலின் கூரை, சுவர்கள், கோபுரங்கள் என அனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. கோவில் கோபுரமும், நுழைவாயிலும் எங்கும் உள்ளது போல் சாதாரணமாகத் தான் தோன்றின. ஆனால் உள்ளே சென்ற போது பிரமிப்பு ஏற்படுகிறது. எங்கும் கண்ணாடிகள் மயம் சிறு சிறு கண்ணாடிகள்! ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்! தூண்களிலும், மேலே விதானம் முழுவதுமே கண்ணாடிக் கூரை தான். அத்தனை கண்ணாடிகளும் சேர்ந்து ஒளித் துண்டுகளைப் பிரதிபலிக்க எங்கேயோ ஒரு மாயபுரியில் இருப்பது போல் பிரமை. கீழே மழமழ தரை அவற்றில் அத்தனை கண்ணாடிகளும் பிரதிபலிக்கின்றன. இந்த மாயங்களை செய்த அதிசய மனிதர் பார்வைக்கு சாதாரண மனிதர் போல் இருந்தார். கோவிலுக்கு வந்தால் காவி ஆடை அணிகிறார். அவர் புறத்தோற்றம் எதுவுமில்லா முனிவர், உள்ளொளி உள்ளவர். காளியம்மன் கோவிலை மிகப் பெரிய தலமாக்க தன் வாழ்நாளையே அர்ப்பணம் செய்தவராவார். அவர் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இந்து ஆகம விதிப்படி பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் எனப் பெயரிடப்பட்டது. சுமார் 21 ஆண்டுகள் பலவித தடைகள், போராட்டங்கள் ஆகியவற்றைக் கடந்து காளியம்மன் அருளால் இங்கு காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பூஜையிலிருந்து தொடங்கி கோவிலுக்கு நிதி திரட்டும் வரை இவரே செய்கிறார். அவரது திருப்பெயர் தான் சின்னத்தம்பி சிவசுவாமி. 1967 இல் பிறந்தவர். மலேசியாவில் பட்டப் படிப்பு படித்து கல்வித் துறையில் சேர்ந்து 18 வருடங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரது 16 ஆவது வயதிலேயே ஓர் அதிசயத் திருப்பம் நடந்தது. மனத்தில் உள்ள ஒரு விரதத்தை முடிப்பதற்கு அருள் மிகு இராஜகாளியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்தார். அவரது பெற்றோரும் அதைக் கண்டு மகிழ்ந்தார்கள். அப்போது தொடங்கியது தான் அவரது தவ யாத்திரை. இப்பொழுது எல்லாச் செயல்களிலுமே கடவுளின் நேர் பார்வையின் முன்பாகவே செய்வது போல் எல்லாம் செய்து வருகிறார். உரிய வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார். திருமதி வசந்தி அடிகள் என்பது மனைவியின் பெயர். மூன்று குழந்தைகள் திருமணத்திற்குப் பிறகும் அவர் கோவில் கடமைகளை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அதிசய சுவாமியின் மனத்துள் மகாகாளியைப் பற்றி தோத்திரங்கள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். கோவில் கடமைகளைத் தவிர அவர் ஆசிரியர் தொழிலையும் செய்து வருகிறார். இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்த போது தாஜ்மஹாலையும் இன்னும் பிரசித்தி பெற்ற பல கோவில்களைப் பார்த்திருக்கிறார். எல்லாமே அமைப்பிலும் அழகிலும் எல்லாரையும் கவர்ந்து இழுத்தன. பின்னர் இவர் பர்மாவுக்கும் சென்றிருக்கிறார். அங்கே உள்ள கோவில்களில் இந்தக் கண்ணாடி அமைப்பைத் பார்த்திருக்கிறார். அதில் சிறிய அமைப்பாகத் தெரிந்தது. சிவசுவாமிக்கு இது பெரிய கனவை உண்டாக்கியது. அந்த வேலைப்பாடு செய்த பர்மிய தொலாளிகளைச் சந்தித்தார். அவர்கள் குடும்பங்களை ஜோகர் பாருவுக்குக் கொண்டு வந்து எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார். தகுந்த ஊதியமும் கொடுத்தார். பிரமாண்டமாக கோயிலை அமைத்தார். இவ்வாறு அமைந்த கண்ணாடிக் கோவில் உலகப் புகழ் பெற்றது. 10 இலட்சம் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவில் கட்டுவதற்கான தொகை 30 இலட்சம் ரிங்கட் (இந்தியப் பண மதிப்பில் ரூ. 11.76 கோடி). கோவிலின் 95 சதவீதம் விதானம், ஸ்தூபிகள், தூண்கள், ஆகியவற்றுக்கான பத்து இலட்சம் வர்ணமயமான கண்ணாடித் துண்டுகள் தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. ஜொகர் சுல்தான் 1922 இல் இதைக் கட்டுவதற்கான நிலத்தைக் கொடுத்தார். இந்தக் கோவில் 1996 இல் புனரமைக்கப்பட்டது. கோவில் முழுவதும் குளிர் சாதனம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் ஆயிரத்து ஐநூறு பக்தர்கள் தரிசிக்கலாம். ராஜ காளியம்மன் கோவிலில் சிவன், விஷ்ணு, பெரியாச்சி அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர், முருகன், அம்பாள் என அனைத்து தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எட்டு குருமார் துறவிகள் என சிலைகள் பல இரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தமது மானசீக குருவாக யார் உளரோ, அவரையும் இங்கு தரிசிக்க ஏற்றவாறு அமைத்துள்ளார்கள். பகவான் இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சாயிபாபா, சுவாமி இராகவேந்திரர், இராமலிங்க அடிகள், இயேசு நாதர், புத்தர், நபிகள் மற்றும் துறவிகள் சிற்பங்களையும் கண்ணைக் கவரும் வடிவில் அமைத்திருப்பதாக ஆலய அறங்காவலர் குருஜி சின்னத்தம்பி குறிப்பிடுகிறார். பிரசித்தி பெற்ற ‘டைம்’ பத்திரிகை 2010 ஏப்ரல் 22 ஆம் திகதி இந்தக் கோவிலைப் பாராட்டி எழுதியுள்ளது. 1996 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர். ஆகம விதிப்படி தினசரி பூஜைகளும் திருவிழாக்களும் தவறாது நடைபெறுகின்றன. ஆஸ்தான குருவாக சின்னத்தம்பி விளங்குகிறார். இவர் நாள்தோறும் நடத்தும் ஆன்மீகப் பேச்சுக்களை ஏராளமான பக்தர்கள் வந்து கேட்டவண்ணம் உள்ளனர். தங்கள் சொந்தப் பிரச்சினைகளுக்கும் இவரிடம் தீர்வு பெற்றுச் செல்கின்றனர். 2001 ஆம் ஆண்டு ‘நயனயுதம் நல்வாழ்வுக் கழகம்’ என்னும் அமைப்பு நிறுவி கோவிலை நிர்வகித்து வருகிறார். ஆலயத்தை ஒட்டிய மூன்று மாடிக் கட்டடத்தில் இலவச சேவையாக சமயக் கல்வி, பாடசாலைக் கல்வி, கணனிக் கல்வியோடு தற்காப்புக் கலையும் சொல்லித் தருகிறார். இந்திய பாரம்பரியக் கலைகளான சங்கீதம், பரதம், தபேலா இவற்றோடு வேலைவாய்ப்பு மையம், தரும காரியங்கள், போட்டி நிகழ்ச்சிகள், பஜனை உலா ஆகியனவும் இங்கே இலவசமாக நடத்தப்படுகின்றன. கண்களுக்கு விருந்தாக வசீகரத் தன்மையுடன் கூடிய அருள் தரும் இராஜ காளி அம்மன் ஆலயம் கண்ணாடி பதிக்கப்பட்ட வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளது. இது மனதிற்கும் அமைதி தரவல்லதாக அமைந்திருப்பது வியப்புக்குரியது. 2008 ஆம் ஆண்டில் நேபாள அரசி இங்கு வருகை தந்தார். அவர் ஆலயத்தைக் கண்டு வியந்து சிவபெருமான் வீற்றிருக்கும் மண்டப விதானத்தில் பதிப்பதற்காக மிகவும் சக்தி வாய்ந்த மூன்று இலட்சம் உருத்திராட்ச மணிகளை நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக ஆலயம் அமைந்திருத்தல் சாலச்சிறந்தது. அதன் சேவைகள் அறிவை, மனதை, உடலை வளப்படுத்துமானால் மனக்குறையின்றி மக்கள் வாழ்வது திண்ணம். இராஜகாளியம்மன் ஆலயத்தை அழகுற அமைத்த ஆலய விற்பன்னர்களுக்கும் ஆலயத்தை அமைக்கப் பாடுபட்டவர்க்கும் இராஜகாளியம்மன் அருளாசி என்றும் கிடைக்கும். நாமும் தரிசித்து அம்மன் அருள் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812