செவ்வாய், 22 மே, 2012

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் 9166. ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதை என்ன வென்பர்? கண்திருஷ்டி. 9167. ஒருவர் நம்மை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? அப்படி பார்க்கும்போது கண் களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல் நிலையில் பாதிப்பு உண்டாக் குவதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர். 9168. இவ்வாறு கண்திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப் பாக இருக்க கூறப்பட்ட பழமொழி எது? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. 9169. கண் திருஷ்டி பட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்த நம் முன்னோர்கள் என்ன செய்து வைத்தார்கள்? கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். 9170. சாஸ்திரங்களில் எத்தனை விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது? ஒன்பது. 9171. அந்த ஒன்பது விஷயங்களும் எவை? ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டு சச்சரவு, மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன்-மனைவி அனுபவங்கள், செய்த தானம், கிடைக்கும் புகழ், சந்தித்த அவமானம், பயன்படுத்திய மந்திரம். ஊறுகொடவத்தை ஸ்ரீமஹா பத்திரகாளியம்மன் திருக்கோயிலின் தேர்த்திருவிழா ஊறுகொடவத்தை சாத்தம்மா என்ற தோட்டத்தின் ஊர் எல்லையில் அந்நியர் இலங்கையை ஆண்ட காலத்திலிருந்து அரச மர நிழலில் கொட்டில் ஆலயம் போல் தொட்டிலிட்டு தோன்றிய ஆலயம் ஸ்ரீமுனீஸ்வரா ஆலயம் வெள்ளை நாகமொன்றும் கரும் நாகமொன்றும் காடு மண்டிக்கிடந்த இந்த ஆலயச் சூழலைச் சுற்றி அன்று வலம் வந்தன. ஆரம்ப காலத்தில் கல்லொன்றை வைத்து வணங்கி வந்தவர்கள் காலப் போக்கில் திருவுருவப் படங்களையும் படிப்படி யாக திருவுருவச் சிலை களையும் வைத்து வழி படத் தலைப்பட்டனர். சின்னஞ்சிறு கொட்டி லாக மடாலயமாக இருந்த ஆலயத்தில் எஸ். ஆறுமுகம் குரு அம்மா தம்பதிகள் ஆரம்ப காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இவர்கள் அம்மாளின் திருவடியை எய்தபின் இவர்களின் புதல்வியாகிய திருமதி நல்லம்மா இவர்களது பணியைத் தொடர்ந்து வந்தார். இந்த ஆலயம் ஊர் எல்லையில் ஓர் ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் இதன் மகிமை மங்கிப் போய் இருந்தது. இதை உணர்ந்த இறைவன் இதனை ஊரின் முன்புறத்திற்கு கொண்டு வர திருவுளம் கொண்டார். இதற்கமைய ஆலயத்தை சாத்தம்மா தோட்டம் ஆரம்பமாகும் இடத்திற்குக் கொண்டுவர திருமதி நல்லம்மா எண்ணங் கொண்டார். இதற்கமைய இவர், தான் வசித்து வந்த சாந்தம்மா தோட்டத்தில் உள்ள 55/2 ஆம் இலக்கத்தைக் கொண்ட வீட்டை மடாலயமாக அமைத்து வழிபட்டு வந்தார். அன்று முனீஸ்வரரர் ஆலயத்தைச் சுற்றி வந்த நாகம்மா அதன் பின் இங்கும் வலம் வரத் தொடங்கினாள். இவ்வாறு இவரது இல்லத்தில் ஆலயம் அமைத்து வழிபடத் தலைப்பட்ட பின் இவருக்கு அம்பாளின் அருள் வரத் தொடங்கியது. இவர் குறி சொல்லவும் தலைப்பட்டார். மடாலயமாக இருந்த இந்த ஆலயத்தை சிறுக, சிறுக ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டியெழுப்ப முனைந்த போது இவரை அறியாமலே ஸ்ரீமகா பத்திரகாளியம்மன் இங்கு வந்து குடிகொண்டு விட்டாள். இங்கு வருடாந்தம் நேர்த்தியாக திருவிழாக்கள் நடந்தேறின. 1998 ஆம் ஆண்டு தை மாதம் இங்கு முதன் முதலாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனையடுத்து இவ்வாலயத்தை நாடிவரும் பக்தர் கூட்டமும் சிறுசிறுகப் பெருகியது. அயலில் உள்ளவர்கள் தங்கள் பொருள் ஏதாவது திருட்டு போனால் அல்லது காணாமல் போனால் இவ்வாலயத்தை நாடி வந்து இந்த நல்லம்மாளின் அருள் வாக்கு கேட்டு அறிந்து கொள்வதுண்டு. நல்லம்மாவின் இரண்டாவது மகனுக்கு முருகப்பெருமானின் திருவருள் கிட்டியுள்ளதால் அவருக்கும் அவ்வப்போது அருள்வாக்குக் கூறும் ஆற்றல் உண்டு என்று அவர் கூறுகிறார். மடாலயமாக இருந்த ஆலயம் இன்று ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இங்கு 2004 ஜூனில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் 6ம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்வாலயத்தின் முதலாவது வருஷாபிஷேகப் பெருவிழா கடந்த 16 ஆம் திகதி மாலை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. இங்கு தினமும் அருள்மிகு ஸ்ரீமகா பத்திரகாளியம்மனுக்கு விசேட அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு பேலியாகொடை ஸ்ரீபூபால விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம்பெறும். அன்று காலை 9.00 மணிக்கு பால்குட பவனி ஊறுகொடவத்தை அருள்மிகு ஸ்ரீமகா பத்திரகாளியம்மன் திருக்கோவிலை அடைந்தவுடன் அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுவதுடன் மகேஸ்வரபூஜை நடத்தப்பட்டு அன்னதானமும் வழங்கப்படும். எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முத்தேர் பவனி இடம்பெறும். ஆலயத்திலிருந்து புறப்படும் அலங்கார சித்திரத்தேர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஊறுகொடவத்தை மேம்பாலம் வழியாக திரும்பி ஊறுகொடவத்தை சந்தி, பேஸ்லைன் வீதி, வழியாக முதலாம் நவகம்புற ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு சென்று களனிதிஸ்ஸ மின் நிலையம் ஊடாக இரண்டாம் நவகம்புர ஸ்ரீமகா காளியம்மன் கோவிலுக்கு சென்று பேஸ்லைன் வழியாக ஆலயத்தை வந்தடையும். சிவஸ்ரீ சண்முகரட்ண குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீகாந்த குருக்கள், பிரம்மஸ்ரீ சாந்தகுமார் சர்மா, கோவில் பூசகர் ஏ. செல்வநேசன் ஆகியோர் வருஷாபிஷேக கிரியைகளை செய்வார்கள். பம்பலப்பிட்டி பழைய கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் மங்கள வாத்திய குழுவினர் மங்கள வாத்தியம் இசைப்பர். எதிர்வரும் 27ம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812