திங்கள், 2 ஜூலை, 2012

ஸ்ரீ சக்கரம் 9241. ஸ்ரீ சக்கரத்திற்கு எத்தனை முக்கோணம் உண்டு? 43 9242. ஸ்ரீ சக்கரத்தில் எத்தனை சிவகோணம் இருக்கு? மூன்று 9243. சக்திகோணம் எத்தனை உள்ளது? ஐந்து 9244. ஸ்ரீ சக்கரத்தில் வேறு என்னென்ன இருக்கும்? அஷ்டதளம், ஷோடசதனம், மூன்று வலயங்கள், 4 சக்கரங்கள், பிந்துநாதம் கலை. 9245. ஸ்ரீ சக்கரத்தில் யோக சாஸ்திரங்களில் விளக்கி உள்ளபடி வேறு என்ன இருக்கும்? ஆதாரங்கள். 9246. ஆதாரங்கள் எத்தனை இருக்கும்? ஆறு 9247. ஆறு ஆதாரங்களையும் தருக? மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை 9248. ஸ்ரீ சக்கரத்தில் மூலாதாரமாக விளங்குவது எது? முக்கோணம் 9249. இதில் சுவாதிஷ்டானமாக விளங்குவது எது? அஷ்டாரம் 9250. மணிபூரகமாக விளங்குவது எது? தசாரம் 9251. அனாஹதமாக விளங்குவது எது? பஹிர் தசாரம் 9252. விசுத்தியா விளங்குவது எது? மன்வச்ரம் 9253. ஆக்ஞையாக விளங்குவது எது? பிந்து 9254. அண்டத்திலே சுவாதிஷ்டான §க்ஷந்திரமாக விளங்குவது எது? திரு ஆனைகள் 9255. சரீரத்திலே மூலாதாரத்திற்கு மேலே இரண்டு அங்குலத்தில் நான்கு தளங்களைக் கொண்டு இருப்பது என்ன? ரத்னம் 9256. இந்த நான்கு தளங்களைக் கொண்டு விளங்குவது என்ன சக்கரம்? சுவாதிஷ்டானம் 9257. ஆறு இதழ்களோடு ஆறு ஆக்ஷரங்களோடு செந்நிற பொலிவுடன் விளங்கும் அத்தாமரையை என்னவென்று அழைப்பர்? சுவாதிஷ்டானம் 9258. அவ்விடத்தில் யார் வசிக்கின்றார்கள்? பாலன் என்ற சித்தனும் ராகினி என்ற தேவியும் 9259. ஆறு இதழ்களில்யார் வசிக்கின்றனர்? பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினி, ரமாசம், பேஷ்டி ஆகிய ஆறு தேவிகளும். 9260. இந்த ஆதாரமானது எதனுடன் இணைந்து விளங்குகிறது. அக்னி தத்துவத்துடன் 9261. இவ்விடத்திலே அதிஷ்டானமாகி கிரந்திகளைச் செய்து கொண்டிருப்பது யார்? குண்டலினி 9262. குண்டலினி நானே அதிர்ஷ்டானமாகி கிரந்தினைச் செய்து கொண்டிருக்கும் என சாஸ்திரங்கள் கூறுவதால், அந்த ஆதாரத்திற்கு என்ன பெயர்? சுவாதிஷ்டானம் அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம் திருமணம் 9236) திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும் போது ஏன் கெட்டி மேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில் யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக் கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே. 9237) மணமக்கள் வீட்டுக்குள் நுழையும் போது ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்? மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்? எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? ஊர்வலம் வருகிறது என்று ஏன் சொல்லுகிறார்கள்? பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கை, கால்களைவிட வலது கை கால்கள் பலம் வாய்ந்தவை. சக்தியோடு வாழ, நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினதாலாகும். தனது வலிமையின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னார்கள். 9238) இந்துக்கள் சாதாரணமாக நண்பர்கள் வீட்டுக்கோ திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச் செல்லும் போது ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.அதன் பொருள் என்ன? இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும். நாங்கள் மீண்டும் வருகிறோம் என்பதற்காகவே. 9239) மணமக்களை ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று ஏன் வாழ்த்துகிறார்கள்? உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள் இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை மக்கட் பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினாறு வகையாகும். மணமக்கள் அவ்வளவு சுகமும் பெற வேண்டும் என்பதையே இந்துக்கள் பதினாறும் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். 9240) கணவனின் பெயரை மனைவி சொன்னால் என்ன நடக்கும் என்று இந்துக்கள் நம்பினார்கள்? மரியாதையும் மங்கலமும் குறையும் என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812