செவ்வாய், 10 ஜூலை, 2012

அறநெறி அறிவுநொடி ஆடி அமாவாசை 9263) பிதுர் பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன? எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். 9264) அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன் முதலில் கூறியவர் யார்? பராசர முனிவர் 9265) பராசர முனிவர் யாருக்கு விளக்கிக் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன? மைத்ரேய மகரிஷிக்கு 9266) அந்தத் தேரில் எத்தனை குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். பத்து 9267) எந்த நிறத்திலான குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும்? தண்ணீரில் பிறந்த முல்லைப் பூ நிறத்திலானது. 9268) அந்தத் தேரை செலுத்தும் போது என்ன நடக்கிறது? சந்திரனிடமுள்ள அமுதத்தினை தேவர்கள் தினமும் அருந்துகின்றனர். 9269) இவ்வாறு தேவர்கள் அமுதம் அருந்துவதால் சந்திரனுக்கு என்ன நடக்கிறது? அது தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும். 9270) அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக நிறைவு செய்பவன் யார்? சூரியன் 9271) இதனை என்ன காலமென்று கூறுவர்? வளர்பிறை 9272) பெளர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை ஈர்த்துக் கொள்பவர்கள் யார்? முப்பத்து முக்கோடி தேவர்கள். 9273) தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் எங்கு வாசம் செய்யும்? அமை என்ற ஒற்றைக் கிரணத்தில் 9274) சந்திரன் இவ்வாறு ஒற்றை கிரணத்தில் வாசம் செய்வதால் அந்த நாளை என்னவென்று அழைப்பர்? அமாவாசை 9275) பித்ருக்களான முன்னோர்கள் எத்தனை பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மூன்று 9276) அந்த மூன்று பிரிவினரையும் தருக. செளமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர். 9277) பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்று கூடி இருக்கும் போது அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் ஏற்படும் நன்மை என்ன? நல்வாழ்த்துகள் கிட்டும். 9278) சந்திரனுடைய தேர் எத்தனை சக்கரங்களைக் கொண்டு திகழ்கிறது? மூன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812