புதன், 29 ஆகஸ்ட், 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம் நல்ல நாள் 9371) வியாழக்கிழமை எந்த திசையில் பயணிக்கலாம்? மேற்கு 9372) வியாழக்கிழமை செய்வதற்கு ஏற்ற நற்காரியங்கள் எவை? புதிய பணியில் சேர்தல், வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருதுசாந்தி, காது குத்துதல், கிரஹப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள். 9373) வெள்ளிக்கிழமை எந்த திசை நோக்கி பயணம் செய்யலாம்? வட திசை 9374) வெள்ளிக்கிழமை செய்வதற்கு ஏற்ற நற்காரியங்கள் எவை? பெண் பார்க்க செல்லல், காது குத்துதல், சாந்தி முகூர் த்தம், புதிய வாகனங்களை வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் 9375) சனிக்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்? தென்திசை. 9376) சனிக்கிழமை எந்த நற்காரியங்களை ஆற்ற உகந்த நாள்? பூமி தொடர்பான விஷயங்கள், அதாவது வீடு, நிலம்,மனை வாங்குதல், விற்றல் செயல்களுக்கும் இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும். 9377) சிலர் எந்தெந்த நாட்களை சுப நாட்கள் என்று கூறுவர்? திங்கள், புதன், வியாழன், வெள்ளி 9378) அசுப நாட்கள் என்று கூறுவது எந்த நாட்களை? ஞாயிறு, செவ்வாய், சனி 9379) சுப நாட்களிலும் எந்தெந்த திதிகள் வருகின்ற நாட்களில் நற்காரியங்கள் ஆற்றாமல் தவிர்ப்பது நல்லது? பிரதமை, அஷ்டமி, நவமி 9380) ஞாயிற்றுக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியம் செய்ய ஏற்றதல்ல? பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி 9381) திங்கட்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியம் செய்ய ஏற்றதல்ல? சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி 9382) செவ்வாய்க்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம் 9383) புதன்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம். 9384) வியாழக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? கேட்டை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி 9385) வெள்ளிக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? பூராடம், ரோகிணி, மிருகசீரிடம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம் அவிட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812