செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கே. ஈஸ்வரலிங்கம்

11084) திருமணமானவர்களை திருமதி என்பது ஏன்? திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்துத் திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறார்கள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு. 11086) வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷயம் சற்று சுவாரஷ்யமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும், விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் கொல்லைப்புறத்தில் (முதல் கட்டு, இரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற்கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவது, தேவைப்பட்டால் அங்கே சமைப்பது இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறை, தோட்டம் இவை இடம்பெறும்), அதிகப்படி சமையலானால் அது முதற்கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து, சுற்றியுள்ள மரங்களில் அமரும் காகங்கள் முதற்கட்டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்டபின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும், இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டு, காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812