திங்கள், 8 அக்டோபர், 2018

நவராத்திரி நாளை ஆரம்பம்


18ஆம் திகதி சரஸ்வதி பூஜை
19 ஆம் திகதி விஜயதசமி




ஒன்பது ராத்திரிகளை முன்கொண்டு முத்தேவிகளின் ரூபங்களில் அன்னை பராசக்திக்கு விழாவெடுப்பது நவராத்திரியாகும்.
அகில உலகையும் காக்கும் அன்னை பராசக்தியை பூஜித்து வழிபட்டு விழாவெடுத்து அவரது கருணை, ஆசீர்வாதம், அருள் கடாட்சம் தன்னை பெறும் பாக்கியமாக நவராத்திரி விழாவைக் கொண்டாடுவதில் இந்துக்கள் பெருமை கொள்கிறார்கள்.
வழக்கம் போலன்றி இம்முறை துர்க்கா, லக்ஷ்மிக்கு மும்மூன்று நாட்களும் சரஸ்வதிக்கு நான்கு நாட்களுமாக உள்ளது. 11ஆவது நாள் விஜயதசமியாக வருகிறது. இந்தவகையில் இம்மாதம் 09ஆம் திகதி நவராத்திரி ஆரம்பமாகி 19ஆம் திகதி விஜயதசமியன்று நிறைவு பெறுகிறது.
இல்லங்களிலும் ஆலயங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் கல்வியகங்களிலும் தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
அமைச்சு மட்டத்திலும் நாடாளுமன்றத்திலும் இவ்விழா கொண்டாடப்படும் அளவுக்கு நவராத்திரியின் மகிமையும் பெருமையும் மேலோங்கியுள்ளது.
பெண்கள் முக்கியமாக நவரத்திரி காலத்தில் விரதம் நோற்று பக்தி பரவசத்துடன் நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள். கன்னிப் பெண்கள் நல்ல வரன் கிட்ட வேண்டி நவராத்திரியில் வழிபட்டு வருகின்றார்கள்.
நவராத்திரி விழா நாடளாவிய ரீதியில் மாத்திரமா கொண்டாடப்படுகிறது, உலகளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அன்னை பராசக்தியின் அருள் கடாட்சம் வேண்டி இந்நவராத்திரியின் மகிமை, பெருமை குறித்து பக்தி சிந்தையுடன் கொண்டாடுவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812