வியாழன், 5 மே, 2022

அறநெறி அறிவு நொடி

19016) திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலயில் ஏற்றப்படுவது என்ன தீபம் ? அணையா தீபம் 19017) இந்த அணையா தீபத்தை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள்? பரணிதீபம் 19018) ஆறாதாரங்களில் திருவண்ணாமலையில் ஆதாரமாகத் திகழ்வது எது? மணிபூரகத் தலம் 19019) திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர் என்ன? பக்தானுக்ரக சோமாஸ்கந்தர் 19020) “கார்த்திகை அகல் தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு எது? 1997 டிசம்பர் 12 19021) அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் எது? திருவண்ணாமலை 19022) இதனால் திருவண்ணாமலைக்கு ஏற்பட்ட பெயர் என்ன? கிளி கோபுரம் 19023) கார்த்திகை நட்சத்திரம் எந்தெந்த தெய்வங்களுக்கு உரியது? சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன் 19024) அருணாசலம் என்பதன் பொருள் என்ன? அருணம்+ அசலம்- சிவந்த மலை19025) சிவாம்சமாகப் போற்றப்படும் ராம பக்தர் யார்? அனுமன் 19026) நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? திருவாசகத்தில் 19027) தர்ம தேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? அறவிடை 19028) அறவிடை என்பதன் பொருள் என்ன? (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) 19029) மனிதப் பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் எவை? அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்) 19030) சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? 108 (நூற்றி எட்டு) 19031) சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் யார்? காரைக்காலம்மையார் 19032) "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர் யார்? அப்பர் (திருநாவுக்கரசர்) 19033) நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்? ஆணவம் 19034) ஆணவம் அடங்கினால் என்ன நடக்கும்? ஆனந்தம் உண்டாகும் 19035) மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்.... மகாகவி காளிதாசர் 19036) பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் எது? குற்றாலம் 19037) நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் எது? சங்கார தாண்டவம் 19038) இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? வெள்ளியம்பலம் 19039) வெள்ளியம்பலம் எங்கு உள்ளது? மதுரையில் 19040) மாலை வேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் எது? பிரதோஷ நடனம் 19041) பிரதோஷ நடனத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? புஜங்கலளிதம் 19042) நடராஜருக்குரிய விரத நாட்கள் எவை? திருவாதிரை, கார்த்திகை சோமவாரம் 19043) நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் என்ன? களி. 19044) திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் யார்? தாயுமான சுவாமி 19045) பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் எது? காளஹஸ்தி 19046) வண்டு வடிவில் இறைவனை பூஜித்த முனிவர் யார்? பிருங்கி 19047) திருமூலர் எழுதிய திருமந்திரம் எத்தனையாம் திருமுறை? பத்தாம் திருமுறை 19048) திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்... திருக்கோலக்கா 19049) திருக்கோலக்கா திருத்தலத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? தாளமுடையார் கோவில் 19050) தாளமுடையார் கோவில் எங்கு உள்ளது? சீர்காழிக்கு அருகில் உள்ளது 19051) விபூதி என்பதன் நேரடியான பொருள் என்ன? மேலான செல்வம் 19052) சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம் எது கஞ்சனூர் 19053) ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை? 12 (பன்னிரெண்டு) 19054) மதுரையில் உள்ள சித்தரின் பெயர் என்ன? சுந்தரானந்தர் 19055) திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் எது? ஆச்சாள்புரம் (திருப்பெருமண நல்லூர்) 19056) நாவுக்கரசரின் உடன் பிறந்த சகோதரி யார்? திலகவதி 19057) சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார் யார்? சேரமான் பெருமாள் நாயனார் 19058) “அப்பா! நான் வேண்டுவன கேட்டருள்புரிய வேண்டும்’ என்ற அருளாளர் யார்? வள்ளலார் 19059) மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை யார்? மங்கையர்க்கரசியார் 19060) மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்? அரிமர்த்தன பாண்டியன் 19061) திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறியவர் யார்? பல்லவ மன்னன் 19062) இந்த பல்லவ மன்னனின் பெயர் என்ன? மகேந்திர பல்லவன் 19063) சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் எது? தத்புருஷ முகம் (கிழக்கு நோக்கிய முகம்) 19064) சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? 8 (எட்டு) 19065) மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? மாசி தேய்பிறை சதுர்த்தசி 19066) மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? 4 கால அபிஷேகம் 19067) வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும் விதம் எது? நமசிவாய 19068) முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? சிவாயநம 19069) சிவசின்னங்களாக போற்றப்படுபவை எவை? திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம) 19070) சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை? அருவுருவம் 19071) பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம் எது? இராமேஸ்வரம் 19072) சிவ வடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம் எது? தட்சிணாமூர்த்தி 19073) கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? 12 (பன்னிரெண்டு) 19074) குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில் எது? குற்றாலம் குற்றாலநாதர் கோயில் 19075) ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம் எது? வில்வமரம் 19076) அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரியின் பெயர் என்ன? மானசரோவர் 19077)திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 81 (எண்பத்தி ஒன்று) 19078) பதிகம் என்பதன் பொருள் என்ன? பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு 19079) சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல் எது? சிவஞானபோதம் 19080) உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கையின் பெயர் என்ன? டமருகம் அல்லது துடி 19081) அனுபூதி என்பதன் பொருள் என்ன? இறைவனுடன் இரண்டறக் கலத்தல் 19082) உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை யார்? மதுரை மீனாட்சி 19083) மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர் யார்? மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை 19084) மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர் என்ன? தடாதகைப் பிராட்டி 19085) பழங்காலத்தில் மதுரை .எவ்வாறு அழைக்கப்பட்டது. நான்மாடக்கூடல், ஆலவாய் 19086) மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம் எது? கடம்ப மரம் 19087) மீனாட்சி எதுவாக இருப்பதாக ஐதீகம்? கடம்பவனக் குயில் 19088) மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள் யார்? திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812