வியாழன், 5 மே, 2022

கலைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருபவர் கணவர்

பரதநாட்டியக் கலைஞராக தன் திறமையை காட்டிவரும் திருமதி தர்ஷி சுகன் ஆன்மீகம், கலை, கலாசாரம் என பல் வேறு துறைகளில் அரும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவரை அண்மையில் செந்துாரம் இதழுக்கு பேட்டி கண்ட போது அவர் அளித்த விபரங்கள் வருமாறு, உங்களைப் பற்றி கூறுங்களேன்......... நான் தென்கைலை எனப் பெயர் பெற்ற திருகோணமலை நகரில் பிரபல மருத்துவரான Dr. நடராஜகுரு ரவிச்சந்திரனுக்கும் திருமதி கருணைமணிக்கும் (மலர்) இரண்டு சகோதரர்களுடன் கனிஷ்ட புதல்வியாகப் பிறந்தேன். எனது மூத்த சகோதரர் துஷ்யந்தன். இளைய சகோதரர் ஹ்ரித்திக்ரோஷன். கல்வியில் கரைகண்ட விபரங்கள் பற்றி கூறுங்களேன்.... எனது ஆரம்பக் கல்வியினை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் (St. Mary's College) ஆரம்பித்து திருமலை புனித பிரான்சிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் (St. Francis Xavier TMV) நிறைவு செய்தேன். நடனத்தில் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன? சிறுவயதில் இருந்தே எனக்கு நடனம் பயில வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது தந்தையாரும் சிறு வயதில் நடனம் கற்றுப் பின் மருத்துவக் கல்வி காரணமாகத் தொடரமுடியாமல் கைவிட்டார். அதனால் அவரது கனவும் என்னை நடனக்கலையில் சிறந்த தேர்ச்சி பெற்றவளாக்க வேண்டும் என்பதே. அவரது கனவுடன் எனது ஆர்வத்தினையும் புரிந்து கொண்ட எனது தந்தையார் நான் பரதநாட்டியக் கலையைப் பயில்வதற்குப் பலவழிகளிலும் ஊக்கமளித்தார். அதற்கு வித்திடும் வகையில் எனது ஆரம்ப நடனக்கல்வியை நடன ஆசிரியை திருமதி சசிகலா பிரபாகரனிடம் மிகவும் ஆரவத்துடன் பயில ஆரம்பித்தேன். அத்துடன் எனது பாடசாலை ஆசிரியை திருமதி கலைச்செல்வி ரவிச்சந்திரனிடமும் நடனம் பயின்றேன். பாடசாலையில் பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றிப் பரிசில்களையும் பாராட்டினையும் பெற்றேன். அதன் பிறகு எனது தந்தையாரது தொழில் இடமாற்றம் காரணமாக தலைநகராம் கொழும்பிற்குக் குடிபெயர்ந்தோம். அங்கு கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா நாட்டியப்பள்ளியில் நடன ஆசிரியை திருமதி சுமதியிடம் நடனக் கல்வியைத் தொடர்ந்தேன். அதே போன்று இசைக் கலையையும் முறையாகப் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் இலங்கை சங்கீத சபை நிறுவனரும் அதன் அதிபருமான திருமதி கௌரீஸ்வரி ராஜப்பனிடம் சங்கீதம் பயின்றேன். அத்துடன் நில்லாது திருமதி பரமேஸ்வரி மோகனவேலிடம் வயலின் கலையையும், திருமதி ராதிகா மற்றும் திருமதி அனுஷா மொறாயஸிடம் வீணைக் கலையையும் முறையாகப் பயின்றேன். அத்துடன் நில்லாது திருமதி துஷ்யந்தி பிரகலாதனிடமும் நடனம் பயிலத் தொடங்கினேன். அவர் எனது திறமையினைப் பட்டைதீட்டி நடனக் கலையில் தேர்ச்சி பெறப் பெரிதும் பாடுபட்டார். அருங்கலையைப் போதித்து அனுபவங்களைப் பகிர்ந்து ஆயகலைகள் கற்பித்து வாழ்விற்கு வழிகாட்டும் வாழ்வியல் புத்தகமே இவர் எனது தந்தையையும் தாயையும் போன்றும் ஒரு உற்ற நண்பனைப் போன்றும் என்னை வழி நடத்திய ஆசிரியர் என்றே கூறலாம். இவரது ஊக்கத்தின் காரணமாகவும் எனது தந்தையாரின் முயற்சியினாலும் என்னுடைய மேற்படிப்பினை இந்தியாவில் சர்வதேசப் புகழ் பெற்ற திருச்சி மாநகரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியக் கல்வியைப் பயின்று முதல் வகுப்பில் தேறி பரதநாட்டியத்தில் இளங்கலைப் (BFA) பட்டம் பெற்றேன். இதற்குப் பலவழிகளிலும் எனது தந்தையுடன் இணைந்து எனது கணவர் சுகந்தன் உதவி புரிந்தார். எனக்கு அமைந்த கணவர் மிகவும் சிறந்தவர் என்பதுடன் அவர் ஒரு ஆன்மீகவாதியுமாவார். நான் எனது இலட்சியத்தினை அடைய அரும்பாடு பட்டவர்களில் அவரும் ஒருவராவார். இன்றுவரை எனது கலைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருகின்றார். கோணேஸ்வரா இசை நாட்டியப்பள்ளியை நிறுவிப் பல மாணவர்களுக்கு இசை, நடன வகுப்புகளை நடாத்தி வருகின்றேன். அத்துடன் ஹேகித்தை சபரிகிரீஷ ஐயப்பன் தேவஸ்தானத்தில் அறநெறி ஆசிரியையாகவும் வத்தளை ஹூணுப்பிட்டி அருண் மாணிக்கவாசகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றேன். இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றிச் சான்றிதழ்களையும், வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட நடனம், இசை மற்றும் வீணைப் பரீட்சைகளில் சித்தியடைந்து சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளேன். கே. ஈஸ்வரலிங்கம் எனது மகள்மார் ரம்யவர்ஷினி , சதுர்ஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812