திங்கள், 30 ஆகஸ்ட், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம் -
தலைவர்/ ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

(கோலம்)

7203) விஷ்ணு பகவான் கோலம் இடுதலை என்னவென்று குறிப்பிடுகிறார்?
பிண்டி மாறுதல்

7204) விஷ்ணு பகவான் கோலத்தை இவ்வாறு கூறியது ஏன்?
அரிசி மாவினால் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட அந்த மாவை எறும்புகளும் காகங்களும் பிற உயிரினங்களும் உண்பதிலிருந்து நம் தர்ம சிந்தனை தொடங்க வேண்டும் என்பதுதான் அவர் சொன்னதன் பொருளாகும்.

7205) இந்த அரிசி மாவை உண்ணும் எறும்புகள் என்ன செய்யுமாம்?
இப்படிப்பட்ட தர்மத்தைச் செய்தவர்களின் கண்பார்வை நன்கு விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுமாம்.

7206) வைகுண்டத்தில் யார் கோலம் போட்டதாக புராணங்கள் கூறுகின்றன?
மஹா லட்சுமி

7207) மாக்கோலம் இடும்போது செம்மண் கரை தீட்டுவார்கள் இது ஏன்?
அழகுக்காகவா? அழகுக்காக மட்டுமல்ல, வெள்ளையும் சிவப்புமாய் கோலம் போடுவது விஷ்ணுவிற்கே கோயில் கட்டுவது போலாகுமாம்!


(இராஜகோபுரம்)

7208 இராஜகோபுரத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
தூலலிங்கம்

7209 தூலம் என்பதன் பொருள் என்ன?
கண்ணால் பார்க்கக்கூடியது

7210 யோகிகள் கோபுரத்தை என்னவென்று குறிப்பிடுவார்கள்?
பிரமந்திர மத்ய கபாலத்வாரம்.

7211 கோபுரம் எத்தனை அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்படும்?
3, 5, 7, 9.

7212 மூன்று அடுக்கு கோபுரம் எதனை குறிக்கும்?
ஐம்பொறிகளை

7213 ஐந்து அடுக்கு கோபுரம் எவற்றைக் குறிக்கும்?
ஐம்பொறிகளுடன் மனம், புத்தி

7214 ஒன்பது அடுக்கு கோபுரம் எவற்றைக் குறிக்கும்?
ஐம்பொறிகளுடன் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றை

(தீபாராதனை)

7215 இறைவனுக்கு எத்தனை வகை உபசாரங்கள் செய்யப்படும்?
16 வகை

7216 16 வகை உபசாரங்களில் மிகச் சிறந்தது எது?
தீபாராதனை.

7217 முக்கோடி தேவர்களும் தீபங்களில் அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வது எப்போது? தீபாராதனையின்போது.

7218 தீபாராதனையின் போது தீபத்தை இறைவனுக்கு எத்தனை முறை காட்டுவார்கள்? மும்முறை.

7219 முதல் சுற்று எதற்காக காட்டப்படுகிறது?
அண்ட சராசரத்தை காக்க.

7220 இரண்டாம் சுற்று எதன் பொருட்டு காட்டப்படுகிறது?
அண்ட சராசரத்தில் உள்ள ஜீவராசிகளை காக்க.

7221 மூன்றாம் சுற்று எதற்காக காட்டப்படுகிறது?
பஞ்ச பூதங்களை காக்க.

7222 ஒன்பது தீபங்கள் எதைக்குறிக்கும்?
நவசக்தியை.

7223 ஏழு தீபங்கள் எதைக் குவிக்கும்?
சப்த கன்னியரை

7224 ஐந்து தீபங்கள் எதைக் குறிக்கும்?
ஐந்து கலைகளை.

7225 மூன்று தீபங்கள் எதைக் குறிக்கும்?
சூரிய, சந்திர, அக்கினியை.

7226 அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தியை குறிப்பது எந்த தீபம்?
ஒற்றைத்தீபம்.

7227 தீபாராதனையில் இறுதியாக காட்டப்படுவது எந்த தீபம்?
கும்ப தீபம்

7228 கும்பதீபம் எதை குறிக்கும்?
உலக தத்துவமான சதாசிவத் தத்துவத்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812