திங்கள், 9 ஆகஸ்ட், 2010

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம் தலைவர் / ஸ்தாபகர், தமிழர் நற்பணி மன்றம்


(வரலக்ஷ்மி விரதம்)


7154. இல்லந்தோறும் திருமகளை நோன்பிருந்து வரவேற்பது எப்போது? வரலட்சுமி விரதம் அன்று

7155. வரலட்சுமி விரதம் எப்போது வரும்?ஆடி அல்லது ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையில்

7156. வரலட்சுமி விரதம் குறிப்பாக எப்போது வரும்?குறிப்பாக ஆவணி மாதம் பெளர்ணமி நாளுக்கு முந்தையாக வரும் வெள்ளிக்கிழமையில்

7157. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் அம்மனை எப்போது அழைக்க வேண்டும்?முதல் நாளான வியாழனன்று

7158. பூஜை செய்யப் போகும் இடத்தில் என்ன செய்ய வேண்டும்? இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதை பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப்போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஒரு வெள்ளிக்காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழம் என்பன வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். அதன்பின் அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவேற்கலாம்.

7159. வரலட்சுமி நோன்புக்கு முதல் அம்மனை அழைத்து மறுநாள் என்ன செய்ய வேண்டும்? நோன்பிருந்து பூஜை செய்து அம்மனை ஆராதனை செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமையன்று விளக்கேற்றி வைத்து நல்ல நேரத்தில் பிள்ளையார் பூஜை செய்து கலசத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து கலச பூஜை செய்து பின் லக்ஷ்மி அஷ்டோத்திரம் முடித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

7160. அட்சதை என்பது என்ன? அரிசி

7161. நிவேதனங்களாக எதை அளிக்க வேண்டும்? மஹா நிவேத்யத்தை

7162. மஹா நிவேத்யத்தில் அடங்கி இருப்பவை எவை? அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி, முதலியவற்றுடன் பழவகைகள்.

7163. மஹா நிவேத்யத்தை அளித்தபின் என்ன செய்ய வேண்டும்?நோன்பு சரடிற்கு தனியே பூஜை செய்ய வேண்டும்.

7164. நோன்பு சரடி என்பது எதனை? நோன்பு நூலை

7165. நோன்பு சரடிற்கு பூஜை செய்தபின் செய்ய வேண்டியது என்ன? நோன்பு நோற்றதன் அடையாளமாக மணிக்கட்டில் சரடைக் கட்டிக் கொள்ளலாம்.

7166. எந்த மணிக்கட்டில்? வலது மணிக்கட்டில்

7167. பூஜை முடிந்த பின் நாள் முழுவதும் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் நல்லதா? ஆம் நல்லது.

7168. மாலையில் என்ன செய்யலாம்? பால் பழம் நிவேதனம் செய்து இரவு தொடங்கும் நேரம் தீபத்தை சாந்தி செய்யலாம்.

7169. மறுநாள் சனிக்கிழமையன்று செய்யக்கூடியதைத் தருக? புனர் பூஜை என்கின்ற பூஜை செய்து சுமங்கலப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம் செய்த சுண்டல் முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம்.

7170. அம்மனை மனம் குளிர பாட்டுக்கள் பாடி அரிசி வைக்கும் பாத்திரத்தை பூஜை செய்த இடத்திற்கு அருகில் வைத்து ஆரத்தி எடுத்தபின் அம்மனை மெதுவாக அந்த அரிசியுடன் கூடிய பாத்திரத்தில் வைப்பார்கள் இது ஏன்? நம் ஆராதனைகளை ஏற்ற திருமகள் நம்முடன் தங்குவதாக ஒரு ஐதீகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812