செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



ஏகாதசி

8330) தை மாத வளர்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பர்?

புத்ரா

8331) இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

புத்ரபாக்யம் கிடைக்கும்

8332) புத்ரா ஏகாதசியை வேறு எவ்வாறு அழைப்பர்?

சந்தான ஏகாதசி

8333) தை தேய்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பர்?

ஸபலா

8334) ஸபலா ஏகாதசி அன்று என்ன செய்யலாம்?

பழதானம் செய்யலாம்.

8335) ஸபலா ஏகாதசியில் பழதானம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

8336) மாசி மாத வளர்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பர்?

ஐயா

8337) ஐயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் ஏற்படும் நன்மை என்ன?

அகால மரணம் அடைந்த மூதாதையர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும் வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நன்மை விட்டு நீங்கும்.

8338) மாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதத்தை என்னவென்று அழைப்பர்?

ஷட்திலா

8339) ஷட்திலா ஏகாதசி அன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் ஏற்படும் பலன் என்ன?

பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812