திங்கள், 7 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


ஏகாதசி


8340) பங்குனி தேய்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பார்கள்?

விஜயா

8341) பங்குனி வளர்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பர்?

ஆமலகீ

8342) சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி என்ன பெயரில் அழைக்கப்படுகிறது.

காமதா

8343) சித்திரை தேய்பிறை ஏகாதசி எவ்வாறு அழைக்கப்படும்?

பாபமோசனிகா

8344) விஜயா ஏகாதசியில் எவ்வாறு பிரார்த்திக்கலாம்?

7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் போல் வைத்து மகா விஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.

8345) காமதா ஏகாதசியில் ஏற்படும் பயன் என்ன?

திருமண யோகம் ஏற்படும்.


8346) பாபமோசனிகா ஏகாதசியில் விளையும்

நன்மை என்ன?

பாபத்தை போக்கும், நல்ல பேற்றினை அளிக்கும், துரோகிகள் விலகுவர்.

8347) வைகாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி என்ன?

ரோஹினீ

8348) வைகாசி தேய்பிறையில் வரும் ஏகாதசி என்ன?

வருதினீ

8349) ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி என்ன?

நிர்ஜனா

8350 )நிர்ஜனா ஏகாதசியை வேறு எவ்வாறு அழைப்பர்?

பீம ஏகாதசி

8351) ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வதை எவ்வாறு கூறுவர்.

பீம பூஜை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812