திங்கள், 21 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

>
கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8370) மகா சிவராத்திரி எப்பொழுது வரும்?

மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை

மிக்க மகா சிவராத்திரி ஆகும்.

8371) சிவராத்திரி விரதம் எத்தனை வகைப்படும்?

ஐந்து

8372) ஐந்து வகையான சிவராத்திரிகளையும் தருக?

1. மகா சிவராத்திரி

2. யோக சிவராத்திரி

3. நித்திய சிவராத்திரி

4. பட்ஷிய சிவராத்திரி

5. மாத சிவராத்திரி


8373) ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு வருவது என்ன?

மாத சிவராத்திரி

8374) சிவராத்திரியன்று எத்தனை ஜாம பூஜை நடைபெறும்?

நான்கு ஜாம பூஜை

8375) முதல் ஜாமத்தில் என்ன அபிஷேகம் நடைபெறும்?

பஞ்ச கவ்விய அபிஷேகம்

8376) இரண்டாம் ஜாமத்தில் என்ன அபிஷேகம் நடைபெறும்?
பஞ்சாமிர்த அபிஷேகம்

8377) மூன்றாம் ஜாமத்தில் நடத்தப்படும் அபிஷேகம் என்ன?

தேன் அபிஷேகம்

8378) நான்காம் ஜாமத்தில் நடத்தப்படும் அபிஷேகம் என்ன?

கருப்பஞ்சாறு அபிஷேகம்

8379) முதலாம் ஜாமத்தில் என்ன நிவேதனம் செய்யப்படும்?

பொங்கல்

8380) இரண்டாம் ஜாமத்தில் என்ன நிவேதனம் செய்யப்படும்?

பாயாசம்

8381) மூன்றாம் ஜாமத்தில் என்ன நிவேதனம் செய்யப்படும்?

நெய்யும் மாவும் கலந்து நிவேதனம்

8382) நான்காம் ஜாமத்தில் என்ன நிவேதனம் செய்யப்படும்?

வெண் பொங்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812