திங்கள், 28 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8383. சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது எவ்வாறு போற்றப்படுகிறது?

பராசக்தி

8384. சக்திக்குரிய மதம் எது?

சாக்தம்

8385. சக்திக்கு தனி மதம் உருவாகக் காரணம் என்ன?

புறச்சமயங்களின் தாக்குதல்

8386. பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதம் எது?

சாக்தம்

8387. சைவம் எந்த நிலையில் சக்திக்கு இடம் கொடுத்துள்ளது?

தத்துவ நிலையில்

8388. அம்பாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது என்ன?

கோடுகளாலான யந்திர வழிபாடு

8389. சக்தி வழிபாட்டில் யந்திர வழிபாட்டை என்னவென்பர்?

ஸ்ரீசக்கர பூஜை

8390. ஸ்ரீசக்கர பூசையை வேறு எவ்வாறு அழைப்பர்?

ஸ்ரீ வித்யோ பாசளை

8391. ஸ்ரீசக்கர பூசை எத்தனை வகைப் படும்?

மூன்று

8392. இலங்கையில் காணப்படுவது என்ன யந்திர பூசை?

பூப்பிரஸ்தார யந்திர

8393. இவ்வழிபாட்டின் அடிப்படையில் சிவனாலயங்களில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் போது என்ன செய்யப்படும்?

திருவுருவங்களுக்கு கீழ் யந்திரம் வைத்து மருந்து சார்த்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812