திங்கள், 6 ஜூன், 2011

அறநெறி அறிவு நொடி



கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



8546) கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?

தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பது போல் மனதையும் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டவே.

8547) வீட்டை விட்டு புறப்படும் போது சுமங்கலிப் பெண்கள் மங்கலப் பொருட்கள் போன்றவை எதிரில் வந்தால்என்ன நடக்கும்?

காரியம் ஜெயமாகும்.

8548) எண்ணெய், இரும்பு, ஆயுதங்கள் போன்ற பொருட்களை எடுத்து யாராவது எதிரில் வந்தால் என்ன நடக்கும் என கூறப்படுகிறது?

செல்லும் காரியம் ஜெயமாகாது. இரத்தக் காயங்கள் ஏற்படலாம் என சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

8549) ஸ்ரீராம ஜெயத்தை யார் எங்கு யாரிடம் எழுதிக் காண்பித்தார்?

அனுமன் அசோகவன சீதையிடம் ராமன் பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டு மணலில் எழுதினார்.

8550) அர்ஜுனனின் தேரில் இருக்கும் கொடி?

அனுமன் கொடி

8551) ஹோமம் நடக்கும்போது கர்ப்ப ஸ்திரீகள் அருகில் இருக்கலாமா?

இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்ப ஸ்திரீகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கவும் தொடர்ந்து அவர்களது வம்சம் விருத்தி அடையவும் பலவிதமான சடங்குகளைச் செய்யச் சொல்லி சாத்திரங்கள் கூறியுள்ளன.

இவற்றில் முக்கியமான சடங்காகிய சீமந்தத்தையும் (வளைகாப்பு) ஹோமத்துடன் செய்ய வேண்டும்.

எனவே ஹோமம் நடைபெறும் இடங்களில் கர்ப்பஸ்திரீகள் அவசியம் இருக்க வேண்டும். இது அவர்களுக்கும் வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் மிக மிக நல்லது என சாத்திரங்கள் கூறுகின்றன.


8552) சிதறுகாய் உடைக்கும் வழக்கம் எவ்வாறு உருவானது?


மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர், காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒருமுறை அவர்கள் ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.

விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.

இதன் மூலம் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்து தகர்த்தார் விநாயகர். அதன் தொடர்ச்சியாக 'விக்கினங்களை தகர்த்த விக்னேஸ்வரர்' என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

இப்போது எந்த செயலுக்கு நாம் புறப்பட்டாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கத்தை பின்பற்றி வருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812