திங்கள், 18 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(மண்டலம்)

8605) ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்?

48 நாட்கள்

8606) ஒரு தெய்வத்தை பூஜிப்பதாக இருந்தால் அதனைத் தொடர்ந்து எத்தனை நாட்கள் பூஜிக்க வேண்டும் என்பார்கள்?

48 நாட்கள்

8607) ஒரு தெய்வத்தை ஒரு மண்டலம் பூஜிக்க வேண்டும் என்று கூறுவதேன்?

சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள் ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும். அச்சுவினி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும். இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத் தொகையான 48 ஐ வழிபாட்டில் ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும் ராசிநாதர்களும் நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே மண்டல வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

(திரிபுண்டரம்)

8608) இறைவனை தியானித்து தண்ணீருடன் சேர்த்து குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக் கொள்வார்கள் இதற்கு என்ன பெயர்?

திரிபுண்டரம்

8609) இந்த மூன்று கோடுகளும் எத்தகைய பலனை அளிக்கக் கூடியது?

மூன்று வகை பாவங்களைப் போக்கவல்லது

8610) முதல் கோட்டில் அமைந்துள்ளவை எவை?

அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, கிரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை, மஹா தேவன்.

8611) இரண்டாவது கோட்டில் அமைந்துள்ளவை எவை?

உகாரம், தட்சிண அக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திர தேவதை, இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன்.

8612) மூன்றாவது கோட்டில் அமைந்துள்ளவை எவை?

மகாரம், ஆலஹனீயம், பரமாத்மமா, தமோ குணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலை நேர மந்திர தேவதை, சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812