திங்கள், 18 ஜூலை, 2011

தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருப்பணி

அவன் இன்றி அணுவும் அசையாது என் பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த இந்துக்கள் ஆதிகாலம் தொட்டு இயற்கைக்கு மதிப்பளித்து இயற்கையை போற்றி வணங்கி வருகின்றனர். உலகெங்கும் வாழ்ந்த இந்துக்க ளைப் போல் கொழும்பு, தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி மாவில ஒழுங்கையில் வாழ்ந்த இந்துக்களும் 1980 ஆண்டுக்கு முன்பிருந்து ஒரு மரத்தின் கீழ் கல்லை வைத்து வழிபட்டு வந்தனர்.

1980ம் ஆண்டுக்கு முன் இங்கு 80 இந்து குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. 1983ம் ஆண்டுக்குப் பின் மேலும் பல குடும்பங்கள் இங்கு வந்து சேர்ந்தன் விளைவாக இங்கு பலகை யால் மடாலயம் அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு பலகையாக இருந்த மடாலயம் கல்லால் கட்டி 1987ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

2000ம் ஆண்டு பேஸ்லைன் வீதி பெருந் தெருவாக்கப்பட்டது. மேம்பாலமும் அமைக் கப்பட்டதுடன் மாடி வீடமைப்புத் திட்டங்களும் இங்கு உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக மேலும் பலர் இங்கு வந்து சேர 2005ம் ஆண்டு இங்குள்ள மக்கள் ஒன்றுகூடி இவ்வா லயத்தை விஸ்தரித்து அமைக்க தீர்மானித்தனர். இதற்கமைய 2005-02-10ம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன் ஆலயம் தரைமட்டமாக்கப் பட்டது. மறுநாளான 11ம் திகதி ஆலயத்தை புனரமைக்க அடிக்கல் நடப்பட்டது.

தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகளை சிற்ப சிந்தாமணி விஸ்வஸ்ரீ செ.ச. சந்தனகுமார் ஸ்தபதி மேற்கொண்டு வருகிறார். ஆலயத்தில் ஆரம்ப காலத்திலிருந்து வந்த விநயாகப் பெருமானின் திருவுருவச் சிலையும் அம்பாளின் திருவுருவச் சிலையும் பின்னப் பட்டிருப்பதால் இத்திருவுருவச் சிலைகளுக்கு பதிலாக புதிய திருவுருவச் சிலைகளை பிரதி ஷ்டை செய்ய ஆலய திருப்பச் சபையினர் திருவுளங்கொண்டனர்.

இவ்வாலயத்தில் சிவன், துர்க்கை, முருகன், மஹாவிஷ்ணு, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகிய பரிவார மூர்த்தங்களின் திருவுருவச் சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படு கின்றன. இவ்வாலயத்தின் திருப்பணிகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ். செல்லச்சாமி, பொ. இராதகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாரத லக்ஷ்மன் பிரேமச் சந்திர, மனோ கணே சன் ஆகியோர் உதவியுள்ளனர்.

இவ்வாலயத்தில் மூலஸ்தானத்தில் பிரதி ஷ்டை செய்யப்படவுள்ள 2 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலைக்கு மேல் மாகாண சபை உறுப்பினர் தயாகாந்த பெரேரா நிதியுதவி அளித்துள்ளார்.

ஆலய மூலஸ்தானம் அர்த்த மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் வசந்தமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு 60 பிள்ளைகளுடன் இவ் வாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாணிவித்தியா அறநெறி பாடசாலை இவ் வாலயம் புதுப்பொலி வுடன் விஸ்திரமாக்க உதவியது.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 2011.08.26ம் திகதி நடைபெறவுள்ளது. ஆலய பரிபாலன சபை தலைவர்: எம். முருகேசன் (பரமு), செயலாளர்: ஆர். விஜயகுமாரன் (விஜயன்), பொருளாளர்: ஆ. குமரன், உபசெயலாளர்: பீ. சிரஞ்ஜீவன், நிர்வாக சபை உறுப்பினர்கள்: கே. கணேஷ், பீ. முருகேசன், எம். சுரேஷ், கே. அசோக், எஸ். நேசன், எம். கணேஷ், ஆனந்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812