திங்கள், 1 அக்டோபர், 2012

அறநெறி அறிவுநொடி இந்துமுறைப்படி உணவு உட்கொள்ளல் 9448) அளவிற்கு அதிகமாக உண்டால் (உணவு) என்ன நடக்கும்? நோய் வரும், ஆயுள் குறையும் 9449) உணவில் மிளகு சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. 9450) உணவில் சீரகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? உடம்பை சீராக வைப்பது மற்றும் குளிர்ச்சியைத் தருகிறது. 9451) வெந்தயம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? உஷ்ணம் குறையும் 9452) வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் என்ன நடக்கும்? உடம்பில் உள்ள உஷ்ணம் குறையும். 9453) கடுகை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவில் வைத்திருக்கும். 9454) இஞ்சியை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வராது. 9455) உணவு உண்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் நீர் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். 9456) உணவு உண்ணும்போது செய்யக்கூடாதவை எவை? பேசக்கூடாது, வடிக்கக்கூடாது, இடது கையை கீழே ஊன்றக்கூடாது, தொலைக்காட்சி பார்க்கக்கூடாது. 9457) வீட்டில் கதவை திறந்து வைத்துக்கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணலாமா? கூடாது 9458) காலணி அணிந்துகொண்டு உண்ணலாமா? கூடாது 9459) சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணலாமா? கூடாது 9460) இருட்டிலோ நிழல்படும் இடங்களிலோ உண்ணலாமா? கூடாது 9461) சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணலாமா? கூடாது 9462) தட்டை மடியில் வைத்துக்கொண்டும் படுத்துக்கொண்டும் உண்ணலாமா? கூடாது 9463) இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதாலும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் நல்லதா? இல்லை, தரித்திரத்தை வளர்க்கும் 9464) ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடலாமா? கூடாது 9465) புரட்டாசியில் திருமணம் செய்யக்கூடாதா? புரட்டாசியில் திருமணம் செய்யலாம். சிலர் மட்டும் புரட்டாசியில் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அது பெருமாள் மாதம். கன்னி மாதம், கன்னி புதனுடையது. தீவிர வைணவ பக்தர்கள் சிலர், பெருமாளுக்கென்று உள்ள மாதம் அது. பெருமாள் வழிபாடு என்று இறைவனுக்கு ஒதுக்கப்பட்டது என்று ஒரு சிலர் அந்த மாதிரி கடைபிடிக்கிறார்கள். ஆனால், புரட்டாசியில் திருமணங்கள் செய்யலாம். அது நல்ல மாதம் தான். மலட்டு மாதம் இல்லை. எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812