புதன், 17 அக்டோபர், 2012

கே. ஈஸ்வரலிங்கம் ஒன்பது 9481) எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படும் எண் எது? ஒன்பது 9482) அந்த எண்ணில் என்ன பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்? நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் 9483) சீனர்களின் சொர்க்க கோபுரம் எத்தனை வளையங்களால் சூழப்பட்டது? ஒன்பது 9484) பெண்களின் கர்ப்பம் பூரணமாவது எப்போது? ஒன்பதாம் மாத நிறைவில் 9485) ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் என்ன பெயர்? நவம் 9486) நவ என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன? புதிய, புதுமை 9487) நவசக்திகள் எவை? வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமணி, மணோன்மணி. 9488) நவதீர்த்தங்கள் எவை? கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு நர்மதை, காவிரி, பாலாறு, குமரி 9489) நவவீரர்கள் யார் யார்? வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன் 9490) நவ அபிஷேகங்கள் எவை? மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், வீபூதி 9491) நவரசங்களும் எவை? இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் 9492) நவக்கிரங்கள் எவை? சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது 9493) நவமணிகள் எவை? கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம் 9494) நவதிரவியங்கள் எவை? பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் 9495) நவலோகங்களும் (தாது) எவை? பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம் 9496) நவதானியங்களும் எவை? நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை 9497) சிவ விரதங்கள் ஒன்பதும் எவை? சோமவார விரதம், திருவாதிரை, உமாகேச்வர விரதம், சிவராத்திரி, பிரதோசம், கேதார, ரிஷப, கல்யாண சுந்தர விரதம், சூல விரதம் 9498) நவசந்தி தாளங்கள் எவை? அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்தி தாளம், படிம தாளம், விடதாளம் 9499) அடியார்களின் நவபண்புகள் எவை? எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருட்சித்தல், தூபம் இடல், தீபம் காட்டல், புகழ்தல், அமுது அளித்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812