புதன், 24 அக்டோபர், 2012

அறநெறி அறிவுநொடி ஒன்பது 9500) விக்ரமார்க்களின் சபையிலிருந்த நவரத்னங்கள் என சிறப்பிக்க ப்பட்ட புலவர்கள் பெயர்க ளைத் தருக? தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸி ம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப் பார், காளிதாசர், வராக மிஹிரர், வரருசி. 9501) பக்தர்களின் நவகுணங்களும் எவை? அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மெளனம். 9502) யாகசாலையில் எத்தனை வகையான குண்டங்கள் அமைக்கப்படும்? ஒன்பது 9503) யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்களையும் தருக? சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண் கோணம், பிரதான விருத்தம். 9504) நவவித பக்திகளும் எவை? சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம். 9505) நவபிரம்மாக்கள் யார்? குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், துனிஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன். 9506) நவபாஷாணங்களும் எவை? வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாவித். 9507) நவதுர்க்கா யார்? ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மச்சாரினி, ஷைலபுத்ரி மகா கவுரி, சந்திர காந்தா, ஸ்கந்த மாதா , மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி. 9508) நவசக்ரங்களும் எவை? த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ செளபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம். 9508) நவநாதர்கள் யார்? ஆதி நாதர், உதய நாதர், சத்ய நாரதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொங்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரகுக நாதர். 9509) உடலின் நவ துவாரங்களும் எவை? இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள். 9510) உடலின் ஒன்பது சக்கரங்களும் எவை? தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மங்கை, சுக்கிலம், தேகஸ், ரோமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812