புதன், 24 ஜூன், 2015

தேர்தல் இடாப்புகளை தமிழில் வெளியிட திணைக்களம் நடவடிக்கை எடுக்காதா?


அரசியல்வாதிகள் பெற்றோருக்கு உதவ வேண்டும்

2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள் வதற்கு தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வதற்காக கடந்த ஐந்தாண்டு கால தேர்தல் இடாப்பில் தமது பெயர். தேர்தல் தொகுதி> கிராம சேவகர் பிரிவு ஆகிய விபர ங்களை இணைத்து அனுப்பும்படி கோரப்பட்டுள்ளது.
அதாவது 2010ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை உள்ள விபரங் களை இணைத்து அனுப்பும்படி கோரப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இராஜகிரியில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் இந்த விபரங்களை பெற்றுக் கொள்ள பெற்றோர்கள் பெருமளவில் வருகின்றனர். தேர்தல் திணைக்களத்தில் இதற்குரிய விண்ணப்பப்படிவம் வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தாங்களாகவே பார்த்து அந்தந்த ஆண்டுக்குரிய விபரங்களை எழுதி பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இங்கு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான அனைத்து வாக்காளர் இடாப்புகளும் தனிச் சிங்களத்திலேயே உள்ளன. இந்த விவரங்களை பெற வருகின்ற பெற்றோர்கள் மத்தியில் சிங்களமொழி எழுதஇ வாசிக் கத் தெரியாதவர்களும் இருக்கின்றார்கள். இங்கு இவர்கள் படுகின்ற பாடு பெரும்பாடாக உள்ளது.
தேர்தல் திணைக்களம் தமிழ் மொழியில் தேர்தல் இடாப்புகளை தயாரிக்க இன்னும் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று தெரிய வில்லை. எவ்வளவோ தொழில் நுட்பங்கள் வளர்ந்து எல்லாம் கணனி மயமாகிவிட்ட இந்த கால கட்டத்தில் மக்கள் இவ்வாறு புத்தகங்களை புரட்டி தேடி கஷ்டப்பட மேண்டுமா? இவற்றை இலகுவாக பெறுவதற்குரிய எளிய நடவடிக்கை முறையொன்றை தேர்தல் திணைக்களம் அறி முகப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கூடாதா?
தேர்தல் காலங்கள் நெருங்கும் போது வாக்கு வேட்டையாட வீடு வீடாக தேர்தல் இடாப்புகளை சுமந்து வரும் அரசியல் வாதிகளாவதுஇ தமது கட்சி அலுவலங்களில் இந்த வாக்காளர்கள் இடாப்புகளை வைத்து பொது மக்களுக்கு உதவி செய்ய நடவடி க்கை எடுக்கக் கூடாதா?
தமிழர் நற்பணி மன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812