செவ்வாய், 23 ஜூன், 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11385) பஞ்ச குமாரர்கள் எவை?
விநாயகர், முருகர். வீரபத்திரர், பைரவர், சாஸ்தா

11386) பஞ்ச நந்திகள் எவை?
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி

11387) பஞ்ச மூர்த்திகள் எவை?
விநாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு

11388) பஞ்சாபிஷேகம் எவை?
வில்வ இலை கலந்த நீர், இரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர், கிராம்பு, கொரேசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம். 

11389) பஞ்ச என்றால் என்ன?
ஐந்து

11390) பஞ்சபூதத் தலங்கள் எவை?
காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல். திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

11391) பஞ்ச உலோகங்கள் எவை?
செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

11392) பஞ்ச புராணம் எவை?
தேவாரம். திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812