செவ்வாய், 16 ஜூன், 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11376) பஞ்ச என்றால் என்ன? 
 ஐந்து

11377) பஞ்சபூதத் தலங்கள் எவை?
காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல். திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

11378) பஞ்ச உலோகங்கள் எவை?
செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

11379) பஞ்ச புராணம் எவை?
தேவாரம். திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

11380) பஞ்சலிங்கத் தலம் எவை?
அர்கேசுவரர் லிங்கத் தலம், பாதாளேஸ்வரர் லிங்கத் தலம், மரனேஸ்வரர் லிங்கத் தலம், மல்லிகார்ச்சுனர் லிங்கத் தலம், வைத்திய நாதேஸ்வரர் லிங்கத் தலம்.

11381) பஞ்சபட்ஷிகள் எவை?
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்

11382) பஞ்ச கங்கை எவை?
ரத்தின கங்கை, தேவ கங்கை, கையிலாய கங்கை, உத்திர கங்கை, பிரம்ம கங்கை

11383) பஞ்சாங்கம் எவை?
திதி, வாரம், நட்சத்திரம், யோகம். கரணம்

11384) பஞ்சர ரிஷிகள் எவை?
அகத்தியர். புலஸ்தியர். துர்வாசர், ததீசி, வசிஷ்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812