ஞாயிறு, 17 ஜூன், 2018

அன்ன தோஷம்


தோஷங்களில் அன்ன தோஷம் என்பது ஒரு வகையான தோஷமாகும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த விரதம் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற பார்க்கலாம்.

தோஷங்களில் அன்ன தோஷம் என்பது ஒரு வகையான தோஷமாகும். பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை இந்த தோஷம் பாதிக்கும்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பவர்கள், உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களை சாப்பிடவிடாமல் விரட்டியடித்துக் கோபித்துக்கொண்டவர்கள், கைவசம் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள், ஒழுங்காகப் பிண்டம் கொடுக்காதவர்கள், சிறு குழந்தைகளை எதிரில் பார்க்க வைத்துக் கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்கள் ஆகியோரை இந்த அன்ன தோஷம் பாதிக்கும் என்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் நிலைக்காது. அவர்கள் வெள்ளி தோறும் விரதம் இருந்து அன்னபூரணியை வழிபட்டு வருவதோடு, இயன்றவரை அன்னதானங்களும் செய்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812