திங்கள், 1 நவம்பர், 2010

றநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(தில்லையம்பலவாணனின் தாண்டவச் சிறப்பு)

8122. சந்தியா தாண்டவம் என்பது எதனை?

புஜங்க லளிதத்தை

8123. புஜங்க லளிதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

பிரதோஷ நடனம்

8124. பிரதோஷ நடனத்தில் முக்கிய இடத்தை வகிப்பது எது?

பாம்பு

8125. காத்தல் தாண்டவத்தின்போது சிவனின் கையில் கோடரி உண்டு. இது எதனை குறிக்கிறது?

கடவுளின் பேராற்றலையும் சத்தியத்தையும்.

8126. அழித்தல் தாண்டவமூர்த்தியின் சிறப்பு என்ன?

கைகளில் துடியும் தீச்சுடரும் மாறியிருப்பது தான்.

8127. தாண்டவ உருவங்களில் வலக்கையில் காணப்படுகின்ற துடி எந்தக் கையில் காணப்படும்? இடக்கையில்.

8128. இடக்கையில் காணப்படுகின்ற தீச்சுடர் எந்தக் கையில் காணப்படும்?

வலக்கையில்.

8129. அழித்தல் தாண்டவ மூர்த்தியில் எதற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது?

தீச்சுடருக்கு.

8130. அழித்தல் செயலை அதாவது ஆன்மாக்களை இளைப்பாற்றும் செயலை குறிப்பது எந்தத் தாண்டவம்?

அழித்தல் தாண்டவம்.

8131. மறைத்தல் தாண்டவத்தில் பெருமானின் கைகளில் காணப்படுகின்றவை எவை?

துடி, சூலம், தீச்சுடர், பாம்பு, பாசம்.

8132. இதில் முதன்மை பெறுவது எது?

பாசக்கயிறு

8133. பாசக்கயிறு முதன்மை பெறுவதற்கு காரணம் என்ன?

இடக்கை வலக்கை இரண்டினாலும் பாசக்கயிற்றை பிடித்துக் கொண்டு அதை தலைக்கு மேல் தூக்கியிருப்பதே முதன்மை பெறக் காரணம்.

8134. உயிர்களை மென்மேலும் வினை செய்வதில் அழுத்தி அதன் மூலமாக உயிர்களுக்கு இருவினை செய்யும் மலபரிபாகமும் ஏற்படச் செய்வதற்காக மணத்தல் செயலை இறைவன் செய்கிறார் எனும் சாத்திரக் கருத்தை விளக்குவது எந்தத் தாண்டவம்?

மறைத்தல் தாண்டவம்.

8135. அருளல் தாண்டவத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

காளி தாண்டவம், சண்ட தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், அனுக்கிரக தாண்டவம்.

8136. அருளல் தாண்டவத்தில் உள்ள தனிச் சிறப்பு என்ன?

குஞ்சிதபாதமாகிய தூக்கிய திருவடியும் கஜஹஸ்தமாகிய நீட்டிய கையும் தாண்டவ பெருமானின் தலைக்கு மேல் இருத்தலாகும்.

8137. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களுடன் இருந்த ஆன்மாவை அவற்றினின்று பிரித்தெடுத்து அதனைத் தூய்மையும் ஒளியும் உடையதாகச் செய்து உயர்ந்த பேரின்ப நிலையை அடையச் செய்வதை உணர்த்துவது எந்தத் தாண்டவம்?

அருளல்

8138. ஊன்றிய பாத்தின் கீழுள்ள முயலகன் எதைக் குறிக்கின்றது? மும்லங்களை

8139. தூக்கி திருவடி எதைக் குறிக்கிறது?

மலம் நீங்கித் தூய்மையடையப் பெற்ற ஆன்மாவைக் குறிக்கின்றது.

8140. ஐந்தொழில்களையும் ஒரே உருவத்தில் அமைத்துக் காட்டுவது எது?

ஆனந்தத் தாண்டவம்.

8141. ஆனந்தத்தாண்டவத்தில் துடி ஏந்திய கை எதைக்காட்டுகிறது?

படைத்தல்

8142. அபயகரம் எதைக் காட்டுகிறது?

காத்தல்

8143. ஊன்றிய திருவடி எதைக் காட்டுகிறது?

மறைத்தல்

8144. தூக்கிய திருவடி எதைக்காட்டுகிறது?

அருளல்

8145. தீச்சுடர் எதைக் காட்டுகிறது?

அழித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812