செவ்வாய், 16 நவம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்,

தமிழர் நற்பணி மன்றம்


திரெளபதை அம்மன்

8162) குழந்தை வரம் வேண்டி வேள்வி செய்தவர் யார்?

துருபத மன்னன்

8163) இந்த வேள்வித் தீயிலிருந்து வெளிப்பட்ட வள் யார்?

திரெளபதை

8164) திரெளபதைக்கு உரிய வேறு பெயர்கள் என்ன?

வைதேகி, பாஞ்சாலி, கிருஷ்ணி, யக்னசேனி, பரிஷதி.

8165) பாண்டவர்கள் ஐவரையும் மணம் முடித்தவள் யார்?

திரெளபதை

8166) மகாபாரதத்தின் கதாநாயகியாகத் திகழ்பவள் யார்?

திரெளபதை

8167) திரெளபதைக் கென்று நடத்தப்பட்ட சுயம்வர தினத்திலே அவளைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றது யார்?

அர்ச்சுன்னன்

8168) அவளை அழைத்து வந்து “அம்மா! இன்று நாங்கள் ஒரு சிறந்த பொருளைக் கொண்டு வந்துள்ளோம். வந்து பார்” என்று அர்ச்சுனன் யாரிடம் கூறினான்?

அவனது தாயான குந்தியிடம்

8169) குந்திதேவி அதற்கு என்ன கூறுகிறார்? “பார்க்க என்ன இருக்கின்றது?

எதுவானாலும் ஐவருமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்கிறார்.

8170) பிறகு அவளுக்கு என்ன தெரிகிறது?

வந்திருப்பது பெண் என்று

8171) அவள் பெண் என்று தெரிந்த பின் என்ன செய்கின்றாள்?

தன் வாக்கைப் பொய்யாக்காது ஐவரையும் அவளை மணக்கும் படி கூறுகின்றாள்.

8172) திரெளபதை மீது மக்கள் ஈடுபாடு கொள்வதற்கு காரணமாக அமைந்தது எது?

அவளுக்கு ஏற்பட்ட துன்பம்.

8173) இந்த ஈடுபாட்டின் காரணமாக திரெளபதை என்ன நிலைக்கு உயர்த்தப்பட்டார்?

தெய்வ நிலைக்கு

8174) பல்லவ மன்னனான முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆட்சிக்கு வந்தது எப்போது?

கி. பி. 670 ஆம் ஆண்டில்

8175) திரெளபதை அம்மன் வழிபாடு எப்போது தோற்றம் பெற்றது?

கி. பி. 670 ஆம் ஆண்டு

8176) யாருடைய ஆட்சி காலத்தில் தோற்றம் பெற்றது?

பல்லது மன்னனான முதலாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில்

8177) திரெளபதை அம்மன் வழிபாடு தோற்றம் பெற்றது எவ்வாறு? கோயில்களிலே மகாபாரதக் கதையை படிக்கச் செய்ததன் மூலம்.

8178) முதலாம் பரமேஸ்வரவர்மன், கோயில்களில் பாரதக் கதையை படிக்கச் செய்தது எதற்காக?

போருக்கு ஏராளமான வீரர்கள் தேவைப்பட்டதால் மக்களுக்கு உணர்ச் சியை ஊட்டி அவர்களைப் போரிலே ஈடுபட வைப்பதற்காக!

8179) இலங்கையில் திரெளபதை அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களைத் தருக?

புத்தளம் மாவட்டத்தில் உள்ள உடப்பு, முந்தல், ஆகிய ஊர்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள மண்முனை, பாண்டி ருப்பு, புளியந்தீவு, போரதீவு ஆகிய ஊர்களிலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812