திங்கள், 26 செப்டம்பர், 2011

தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய நவராத்திரி விழா

தெஹிவளை, களுபோவில, ஸ்ரீ போதிருக்காராம வீதி, 3/1/1 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி எதிர்வரும் 28 ஆம் 29 ஆம் திகதிகளில் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கும் 30 ஆம், 01 ஆம், 02 ஆம் திகதிகளில் ஸ்ரீ இலட்சுமி அம்மனுக்கும் 03 ஆம் 04 ஆம், 05 ஆம் திகதிகளில் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள் நடைபெறும்.

எதிர்வரும் 06 ஆம் திகதி காலை 8 மணிக்கு விசேட பூஜை வழிபாடும் 10 மணிக்கு மானம்பூ விழாவும் 10.30 மணிக்கு வித்தியாரம்பமும் (ஏடு தொடக்குதல்) இடம்பெறும்.

அன்று பி. ப. 2.30 விசேட பூஜை நடத்தப்படுவதுடன் சகல தெய்வங்களுக்கும் தீபாராதனை செய்யப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் ஸ்ரீ துர்க்கா, ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி நகர வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த மஞ்சத் திருவிழா ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீ சரணங்கர வீதி வழியாக சென்று ஆஸ்பத்திரி வீதி, வில்லியம் மில் சந்தி வரை சென்று காலி வீதியூடாக ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோயிலுக்கு சென்று பின் காலி வீதி வழியாக டபிள்யூ. ஏ சில்வா மாவத்தை, ஹம்டன் ஒழுங்கை, கனல் ஒழுங்கை வழியாக ஆலயத்தை வந்தடையும்.

எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வைரவர் மடை நடைபெறும். இவை யாவும் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகளின் ஆசியுடன் இடம்பெறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812