திங்கள், 19 செப்டம்பர், 2011

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8670. இறைவனை பூஜிக்க பூக்களை பயன்படுத்துவது ஏன்?

மலர்கள் அழகானவை பல வண்ணங்களில் பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் அவற்றின் வாழ்க்கையோ மிகவும் குறுகியது. அவை தம்மிடமுள்ள தேனை வண்டுகளுக்கு கொடுத்து விடுகின்றன. மலர்கள் குறுகிய கால வாழ்விலும் பிறருக்கு இனிமை தந்து தியாக உணர்வுடன் சேவை செய்கின்றன.


8671. ஆண்டவனுக்கு பழங்களை படைப்பதன் தத்துவம் என்ன?

பழங்கள் தம்மிடமுள்ள சத்துகளை மனிதனும் பறவைகளும் விலங்குகளும் வாழ உணவாகக் கொடுக்கின்றன. பழத்தை பறிக்காமல் விட்டுவிட்டாலும் அது கனிந்து உதிர்ந்து மண்ணுடன் கலந்து தனது சதையை புழுபூச்சிகளுக்கும் வித்தை மண்ணில் மீண்டும் உயிர்ப்பிக்கவும் கொடுத்து உதவுகிறது.

இயற்கையின் வடிவங்களில் தியாக உணர்வைக் காட்டும் அற்புதமான சின்னங்களாக மலர்களும் கனிகளும் விளங்குவதால்தான் ஆண்டவனுக்கு மிகவும் உகந்தவையாக கருதப்படுகின்றன.


8672. ஹோமம் என்பது என்ன?

நமக்கு மழையைக் கொடுத்து வெப்பத்தையும் தந்து வளமையும் செழுமையும் அருளும். தேவர்களுக்கு நாம் அந்த அருளை வேண்டிச் செய்யும் பிரார்த்தனை தான் ஹோமம்.


8673. ஹோம அக்னியில் பட்டுப்புடவை, ரத்தினம், நெல் போன்றவற்றைப் போடுவது விரயமாகாதா?

வயலில் நெல் விதையை அள்ளி வீசி விதைப்பதன் தத்துவம் புரியாத ஒருவரை அருமையான நெல் மணிகளை சேற்றில் வீசி வீணடிக்கிறார்கள் என்றுதான் சொல்வான். விவசாயி செய்யும் செயலால் ஒவ்வொரு நெல்லும் பலநூறு நெல் மணிகளைக் கொடுக்கும். அதனால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது அந்த விவசாயிக்கும் விஷயம் புரிந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்.

ஹோமத்தில் நாம் வேண்டிக் கொள்ளும் செல்வங்களை பாவனையாக இடும் போது அதுபல மடங்காக நமக்கு பிரதிபலனை அளிக்கிறது. எனவே அது வீணாவதும் இல்லை விரயமாவதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812