திங்கள், 19 டிசம்பர், 2011

பஞ்சாங்க நாட்காட்டிகள்

மனதிற்கு இதம் அளிக்கும் மாதமாகவும், பக்தி பூர்வமான மாதமாகவும், திகழ்வது மார்கழி மாதமாகும். ஸ்ரீ ஆஞ்சநேய பகவான் அவதரித்த மாதமாகவும் ஆண்டாளின் அருமை பெருமைகளையும் எடுத்து இயம்பும் மாதமாகவும் திகழ்வது மார்கழி மாதமாகும்.

மார்கழி மாதத்திலே பக்தர்கள் தினசரிக் கலண்டர்களையும், மாதாந்த கலண்டர்களையும் பஞ்சாங்க கலண்டர்களையும் வாங்குவதற்காக தயாராகும் மாதமாகவும் மார்கழி மாதம் திகழ்கிறது. இலங்கையிலேயே கொழும்பு நகரினிலே தனிமனிதனாக நின்று தமிழ் இந்து பஞ்சாக கலண்டர்களை வருடாந்தம் அச்சிட்டு வெளியிட்டு வருபவர் வே. பாலேந்திரா. இவர் அச்சிட்டு வெளியீடும் பஞ்சாங்க கலண்டர்கள், நாட்காட்டிகள் இந்து விரத நாட்களையும், இந்து மத பண்டிகைகளையும், குருபூஜை தினங்களையும் ஷஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், சதுர்த்தி, ஏகாதசி, அமாவாசை, சங்கடஹரசதுர்த்தி போன்ற தினங்களையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டு வெளிவருவது இதன் சிறப்பம்சமாகும். காலத்திற்கு ஏற்ற விதத்திலே இந்து மத மற்றும் ஏனைய மதத் தெய்வங்களின் திருவுருவப் படங்களை, இந்த நாட்காட்டிகளில் பஞ்ச வர்ணங்களில் கண்களை கவரும் விதத்திலே மனங்களை இறைவனை நெஞ்சுருகி கைக்கூப்பி வணங்க வைக்கும் விதத்திலே தத்ரூபமாக தருவதில் யுனிலங்காஸ் கலண்டர்களுக்கு நிகரான நாட்காட்டிகள் இல்லை என்றே கூறலாம். இலங்கை முழுவதிலும் உள்ள பிரபல்யமான ஆலயங்களினதும் அதேபோன்று தமிழகத்திலுள்ள பிரபல்யமான ஆலயங்களினதும் உற்சவ தினங்களை ஆணித்தரமாக இந்த கலண்டர்களில் குறிப்பிட்டிருப்பதை காணலாம். 2012ம் ஆண்டு நாட்காட்டிகளில் சுபமுகூர்த்தங்களையும் கணித்து வெளியிட்டிருப்பது ஜோதிடரை நாடாமல் முகூர்த்த தினங்களை பக்தர்கள் தாங்களாகவே நிர்ணயித்து கொள்ளக் கூடியதாக உள்ளது. தமிழகத்திலே பிரபல்யமான ஜோதிட விற்பன்னர் முருகு பாலமுருகன் இந்த பஞ்சாங்க கலண்டர்களுக்கான முகூர்த்த தினங்களை கணித்து தந்திருப்பதிலிருந்து இந்த நாட்காட்டிகளின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மொத்தத்தில் ஒரு சிறிய தொகையை செலுத்தி வருடத்திற்கு ஒரு முறை வாங்குகின்ற இந்த நாட்காட்டிகள் வருடத்தில் 365 நாட்களும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது அதன் பெருமைக்கு நற்சான்றாகும். ராகுகாலம், எமகண்டம் சித்தம், அமிர்த்தம், மரணயோகம், கரிநாள் போன்ற இன்னோரன்ன விடயங்களையும் இந்த நாட்காட்டிகளில் நாம் கண்டு கொள்ளலாம். தங்கள் தங்கள் இஷ்ட்ட தெய்வங்களின் திருவுருவப் படங்களை பொறித்த இந்த நாட்காட்டிகளை இவர் வெறுமனே வர்த்தக ரீதியாக மட்டுமன்றி சேவை மனப்பான்மையுடனும் வெளியிட்டு வருவதால் இந்த நாட்காட்டி கொள்வனவு செய்வதன் மூலம் அவரது சேவை தொடர வழியமைத்து கொடுக்க எங்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812