திங்கள், 12 டிசம்பர், 2011

தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய தேர்த்திருவிழா 23ஆம் திகதி




கொழும்பு - தெஹிவளை அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஸ்ரீமத் சந்திரசேரக சுவாமிகளின் தலைமையில் ஆரம்பமாக வுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஹோமத்துடன் கிரியாகால உற்சவம் ஆரம்பமாகும். இவ்வாலயத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9 மணிக்கு நவக்கிரஹ ஹோமமும் 15 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ நாகபூசனி, ஸ்ரீ வைரவர், ஸ்ரீ மஹாகாளி ஹோமம் என்பனவும் 16ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ துர்க்கா ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ குபேரன் பூஜை என்பன வும் 17 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஸ்ரீ முருகன், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை பூஜை என்பனவும் 18 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு சிவபூஜையும் 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீ தனவந்திரி ஹோமமும் 20 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஸ்ரீ மஹா விஷ்ணு ஹோமமும், சனி பெயர் ச்சி, 21 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ இராமர், ஸ்ரீ இலட்சுமணர், ஸ்ரீ சீதா, ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜை என்பனவும், 22 ஆம் திகதி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் பூஜையும் நடைபெறும். இங்கு எதிர் வரும் 23 ஆம் திகதி காலை 7.00 மணி க்கு தேர்த்திருவிழா நடைபெறும்.

அன்று விசேட மலர் அலங்காரத்து டன் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஆகிய மூர்த்திகளுடன் பக்தர்கள் வடம்பிடித்து வர திருத்தேர் பவனி ஆரம்பமாகும். இத்திருக்கோயிலில் இருந்து ஆரம்பமாகும் தேர்பவனி, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில வீதி, காலி வீதி, வழியாக பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயம் சென்று அங்கிருந்து காலி வீதிவழியாக டபிள்யூ. ஏ சில்வா மாவத்தை, ஹம்டன் ஒழுங்கை, கனல் வீதி, போதிருந்தராம வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும். அதனைத் தொடர் ந்து பச்சை சாத்தி பிராயச்சித்த அபிஷேகம் நடை பெறும்.

எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி விழா கடல் தீர்த்தத்துடன் ஆரம்ப மாகும்.

அன்று மு. ப. 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு 409 வலம்புரிச் சங்குகளினால் சங்காபி ஷேகமும் விசேட பூஜையும் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விஷேட வடைமாலை அலங்காரம், குருபாத பூஜை, திருவூஞ்ச லுடன் உற்சவ அருட்காட்சி நடைபெறும். எதிர்வரும் 27 ஆம் திகதி வைரவர் மடை நடை பெறும்.

உற்சவ தினங்களில் பகலில் அன்னதானம் வழங்கப் படும். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஸ்ரீ ஹனுமன், ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ வராஹிஸ்வரர், ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய பஞ்சமுகங்களினால் தெஹிவளை அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812