புதன், 7 டிசம்பர், 2011

அறநெறி அறிவுநொடி


கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

கார்த்திகை தீபம்

8805. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர பெளர்ணமியன்று கொண்டாடப்படும் விழா எது?

கார்த்திகை தீபத் திருநாள்

8806. கார்த்திகை தீபத்திருநாள் எங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்?

திருவண்ணாமலையில்.

8807. ‘தொல்கார்த்திகைத் திருநாள்’ என்று கார்த்திகை திருநாளின் தொன்மையை தேவாரப்பதிகத்தில் பாடியவர் யார்?

ஞானசம்பந்தர்.

8808. கார்த்திகை விழாவின் சிறப்பை போற்றுகின்ற மிகப் பழைய இலக்கியங்கள் எவை?

அகநானூறு, நற்றிணை போன்ற நூல்களில்.

8809. சம்பந்தர் எத்தனையாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

ஆறாம்.

8810. இதனையும் பிற இலக்கியங்களையும் வைத்து பார்க்கும்போது கார்த்திகை தீபத்திருவிழா எவ்வளவு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது?

2500 ஆண்டுகளாக

8811. பன்னிரு ஆழ்வார்களில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் யார்?

திருமங்கையாழ்வார்.

8812. திருமங்கையாழ்வார் எதன் அம்சமாகத் தோன்றினார்?

வில்லின்.

8813. இந்த வில்லின் பெயர் என்ன?

சாரங்கம்.

8814. இந்த சாரங்கம் என்னும் வில் யாருடைய கையில் இருக்கும்?

திருமாலின்.

8815. திருமங்கையாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர் என்ன?

நீலன்.

8816. நீலன் யாரிடம் படைத் தலைவராக இருந்தார்?

சோழ மன்னனிடம்.

8817. நீலனின் வீரத்தைப் பாராட்டி சோழ மன்னன் என்ன செய்தார்?

ஆலிநாடு என்னும் பகுதியை கொடுத்து அரசனாக்கினான்.

8818. நீலனுக்கு திருமங்கையாழ்வார் என்ற பெயர் எவ்வாறு வந்தது?

திருமங்கை என்னும் தலைநகரை அமைத்து அதில் அரசாட்சி செய்ததால்.

8819. இவர் அடியார்களுக்கு அமுதிட்டது எவ்வாறு?

வழிப்பறி செய்து

8820. பெருமாள் எந்த கோலத்தில் வந்து இவரை ஆட்கொண்டார்?

மணமகன் கோலத்தில்

8821. ஆழ்வார்களில் அதிகமான பிரசுரங்களை பாடியவர் யார்?

திருமங்கை ஆழ்வார். பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம் திருநெடுத்தான்டகம்,

8822. திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறையும் என்னவென்று கூறுவர்?

பிரபந்தங்கள்.

8823. இந்த ஆறு பிரபந்தங்களையும் பாடியவர் யார்?

திருமங்கை ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812