திங்கள், 27 பிப்ரவரி, 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

நிறை குடம்


8962) நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள் எவை?

நிறைகுடம் (நீர் நிறைந்த குடம்), சாணம் அல்லது மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது பிள்ளையாரின் சிலை நெல் அல்லது பச்சரிசி, தலை வாழை இலை, முடித் தேங்காய் 1, மாவிலை 5 அல்லது 7, குத்து விளக்கு 2, தேங்காய் எண்ணெய், விளக்குத் திரி, விபூதி + கிண்ணம், சந்தனம் + கிண்ணம், குங்குமம் + கிண்ணம், பன்னீர் + செம்பு, பலநிறப் பூக்கள், வாழைப்பழம் ஒரு சீப்பு, தேசிக்காய், தேங்காய் உடைப்பதற்கு) வெற்றிலை 3, பாக்கு 3, சாம்பிராணி.

8963) நிறைகுடம் வைக்க முதலில் என்ன செய்ய வேண்டும்?

ஒரு மேசையைச் சுத்தம் செய்து, அதன் மீது சுத்தமான விரிப்பொன்றை விரிக்கவும், அதன் பின் அதன்மீது ஒரு தலைவாழை இலையை வைக்கவும்.

8964) தலைவாழை இலையை, இலையின் நுனிப் பகுதி எந்தத் திசையில் இருக்குமாறு வைக்க வேண்டும்?

வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு

வைக்க வேண்டும்.

8965) மேற்கூறிய முறை அவ்விடத்திற்கு பொருந்தாவிட்டால் என்ன செய்யலாம்?

பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக்கூடியதாக வாழை இலையை வைக்கவும்.

8966) வாழை இலையை வைத்த பின் என்ன செய்ய வேண்டும்?

நெல் அல்லது அரிசி பரப்பி, அதன்மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது சில்வரினால் ஆன கும்ப குடத்தை வைக்கவும்.

8967) கும்ப குடத்தை வைத்த பின் என்ன செய்ய வேண்டும்?

அதன் இரு பக்கங்களிலும் குத்து விளக்கு ஒவ்வொன்று வைக்கவும்.

8968) அதன் பின் என்ன செய்ய வேண்டும்?

ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து சுத்தம் செய்து வைத்த முடித் தேங்காயை அதன் மேல் வைக்கவும்.

8969) அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது எத்தனை மாவிலைகளை வைப்பார்கள்?

மூன்று

8970) கும்பத்தை வைத்தபின் என்ன செய்யலாம்?

ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பு ஒன்றும் வெற்றிலை பாக்கு (வெற்றிலை ஒற்றைவிழும் எண்ணில்) தேசிக்காய் ஒன்று ம் வைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.

8971) மேற்குறிப்பிட்ட பொருட்களைக் கொண்ட தட்டை கும்பத்தின் எந்தப் பக்கத்தில் வைக்க வேண்டும்.

இடது பக்கத்தில்.

8972) இந்தத் தட்டை இடது பக்கத்தில் வைத்து என்ன செய்யலாம்?

அதனுள் மஞ்சளினால் செய்த பிள்ளையாரை அல்லது பிள்ளையார் சிலையை வைக்கலாம்.

8973) சந்தனம், குங்குமம், பன்னீர்ச் செம்பு, விபூதி, இவற்றை என்ன செய்யலாம்?

இன்னொரு தட்டில் வைக்கவும்.

8974) இந்தத் தட்டை கும்பத்தின் எந்தப் பக்கத்தில் வைக்க வேண்டும்?

வலப்பக்கத்தில்

8975) இவ்வாறு நிறைகுடம், சந்தனம், குங்குமம் வைத்தபின் என்ன செய்வார்கள்?

நிறைகுடத்திற்கு மாலை போடுவார்கள் அல்லது பூக்களால் அலங்கரிப்பார்கள். குத்துவிளக்குக்கும் மாலை போடுவார்கள்.

8976) குத்து விளக்குகளை எப்போது கொளுத்த வேண்டும்?

நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்

8977) எத்தனை திரிகளை கொளுத்த வேண்டும்?

திரிகளில் ஒவ்வொன்றையோ அல்லது ஐந்தையுமோ

8978) குத்துவிளக்கை கொளுத்திய பின் செய்யக்கூடிய செயல் என்ன?

தேங்காய் ஒன்றை உடைத்து கும்பத்தின் இருபக்கங்களிலும் வைக்கலாம். தூபம் ஏற்றலாம். ஒன்று அல்லது மூன்று சாம்பிராணிக் குச்சிகளைக் கொளுத்தி வாழைப்பழத்தில் குத்திவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812