வெள்ளி, 2 நவம்பர், 2012

ல்லாளன் காலத்திற்கு முற்பட்ட கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் கொழும்பு மாநகரிலே கொட்டாஞ்சேனை சந்தியிலிருந்து 50 மீற்றர் தொலைவிலே வீதியின் மேற்கிலே குளுகுளுவென குளிர்மையான தென்றல் தவழும் அரச மரத்தடியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம். இந்த ஆலயம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்ற தோற்ற காலத்தையோ இந்த ஆலயத்தின் முழுமையான பரிபாலன தகவல்களையோ அறியக்கூடிய வாய்ப்புகள் அரிதாகவே இருந்தன. ஆனால் ஆதியில் அரச மரத்தடியில் வழிபாடு நடந்ததும் கருங்கல்லினால் செதுக்கப்பட்ட விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலையும் நாகதம்பிரானின் திருவுருவச் சிலையும் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததும் 1890 என்னும் எண்களை தாங்கி இருந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட விளக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாலயம் 1890 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்பது இதிலிருந்து புலனாகிறது. இவ்வாலயம் எல்லாள மன்னன் காலத்திற்கு முந்தியதென்றும் போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களது இராணுவ வீரர்கள் இந்த ஆலயத்தை பதுங்கி இருக்கும் இடமாகவும் பயன்படுத்தினார்கள் என்றும் ஒல்லாந்தர் காலத்தில் தங்களுக்கு தேவையானவற்றை சுருட்டிக்கொண்டு ஆலயத்தை அழித்து விட்டார்கள் என்றும் கருத்துக்கள் உண்டு. முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகவிருந்த வேளையில் கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய சிவாச்சாரியார்களின் இன்றைய வதிவிடமாக அமைந்துள்ள அன்றைய அரசடி இடுகாட்டுப் பகுதியில் 1913 இல் ஓர் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்த பல நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட அந்த முகாமில் இருந்திருக்கிறார்கள். அந்த முகாமில் வட இந்தியாவைச் சேர்ந்த சண்முகர்ஜீ பட்டேல் என்பவர் தலைமையை ஏற்று பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் விநாயகர் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர் எனவே அரச மரத்தடியில் அமர்ந்து அருள்பாலித்த வரதராஜ விநாயகப் பெருமானை வழிபடும் முறைமை அவருக்கும் உரியதாயிற்று. இந்த வழிபாட்டு தலத்திற்கு அருகில் வசித்து வந்த வில்லவராஜா என்பவருடனான தொடர்பும் வலுவானது. இதனால் வில்லவராஜாவின் மகளை சண்முகர்ஜி பட்டேல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் சண்முகர்ஜி பட்டேலுக்கு விநாயகர் மீது இருந்த பக்தி மென்மேலும் வளர வழிகோலியது. இதன் விளைவாக அரச மரத்தின் தெற்மேற்கில் விநாயகரின் திருத்தலம் உருவாக வழியேற்பட்டது. 1917 ஆவணியில் விநாயகரின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடும் முறைமையை சண்முகர்ஜி பட்டேல் ஏற்படுத்தி கொடுத்தார். இந்த காலகட்டத்தில் பிக்கரிங்ஸ் வீதியில் பஞ்சலோக வேலை செய்யும் ஆசாரியர் வாழ்ந்து வந்தனர். இவர்களும் வரதராஜா விநாயகர் மீது தீவிர பக்தி கொண்டனர். 1921 இல் சண்முகர்ஜி பட்டேலுக்கு நாட்டை விட்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் இவ்வாறு போகும் போது தமக்கு உதவியாளராக இருந்த பஞ்சலோக ஆசாரியர் சமூகத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் என்பவரிடம் ஆலயத்தை கவனிக்கும்படி ஒப்படைத்து விட்டுச் சென்றார். இரண்டாவது உலக மகா யுத்த நெருக்கடிகளுடன் பிக்கரிங்ஸ் வீதியில் இருந்த ஆசாரியர் 1943 இடம்பெயர்ந்தனர். அதனால் விநாயகராலய பரிபாலனம் சில ஆண்டுகள் கவனிப்பார் அற்றிருந்து. 1944.08.27 இல் எழுந்தருளி விநாயகர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கவனிப்பாரற்று ஒழுங்கற்ற முறையில் இருந்த ஆலயத்தை திருமதி சொர்ணம்மா சுப்பிரமணியம் அர்ச்சகர் ஒருவரை நியமித்து பூஜை முறைகளை ஒழுங்காக்கினார். 1951 இல் பரிபாலன சபை ஸ்தாபிக்கப்பட்டது. 1952 இல் சிவஸ்ரீ நடராசா சோமஸ்கந்தக் குருக்கள் பூசை நடைமுறைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 1961 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1962.07.10இல் முதலாவது மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1988 நவம்பர் 27இல் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 2012.04.12 ஆம் திகதி இவ்வாலயத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு இன்று காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அமிர்தகல பஸ்லே கணகல அவிசாவளை கிளனெக்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் கொழும்பிலிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது அவிசாவளை அமிர்தகல பஸ்லே கணகல என்னும் ஊர். இந்த ஊரில் கிளனெக்ஸ் என்ற எஸ்டேட் உள்ளது. மலையும் மலைசார்ந்த இந்த குறிஞ்சி நிலப்பரப்பிலே இலங்கைக்கு அந்நிய செலா வணியை ஈட்டித் தரும் இறப்பர் தோட்டத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம். இந்தியாவிலிருந்து பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்கள், மலையகத்திலே காடுகளை வெட்டி கழனிகளாக்கியது மட்டுமன்றி மரத்தடிகளில் தங்களது இஷ்டதெய்வங்களை வைத்து வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் இவை ஆகம விதிகளுக்கேற்ற ஆலயங்களாக கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அமை யப் பெற்ற ஆலயங்களில் ஒன்றுதான் இந்த முத்துமாரி அம்மன் ஆலயம். இந்த ஆலயம் எப்போது தோன்றியது என்று சரியான கணிப்புக் காலம் தெரியாது. ஆனால் இற்றைக்கு 65 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்து வந்த அன்னமலை என்பவர் இந்த ஆலயத்தின் பொறுப்பாளராக இருந்து இதனை பராமரி த்து வந்துள்ளார். அவருக்குப் பின் அவரது புதல் வர் நடேசன் முதலியார் பராமரித்து வந்த ஆலயத்தை அவருக்குப் பின் தற்போது அவரது புதல்வர் முருகேசன் பராமரித்து வரு கிறார். ஆரம்பத்தில் மடாலயமாக இருந்ததை இவர்கள் ஆலயமாக கட்டியெழுப்பியுள்ளனர். 1970 - 72 ஆம் ஆண்டுகளில் இவ்வாலயம் புனரமைப்பு செய்யப் பட்டது. 1983 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது இந்த ஆலயத் துக்கும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தாபனம் செய்யப் பட்டு இன்று காலை 9.32 மணிக்கு இவ்வாலய த்தில் கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது. சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து ள்ள இவ்வாலயத்தில் 30 அடி உயரமான இராஜகோபுரம் ஒன்று பொம்மைகள் சூழ அமை க்கப்பட்டுள்ளது. இங்கு எல்லாம்வல்ல ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மூல மூர்த்தியாக வீற்றி ருந்து அருள்பாலிக்க விநாயகப் பெருமான், முருகப் பெருமான், நந்தி தேவர், வைரவப் பெரு மான் ஆகிய தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக இருந்து அருள் பாலிக்கின்றன. இலக்கம் 101, கடை வீதி, பத்தனையைச் சேர்ந்த ஏ. பெரியசாமி ஸ்தபதி, தமிழகத்தைச் சேர்ந்த நாகலிங்கம் ஜெகநாதன் சிற்பி ஆகியோர் ஆலய சிற்ப திருப்பணி வேலைகளை செய்ய டீ மோகன்ராஜ் வர்ண வேலைப்பாடுகளையும் அவிசாவளை கிரனேட் ஸ்டேட்டைச் சேர்ந்த பீ. ரஞ்சன் பூச்சு வேலைகளை செய்தார். இவ்வாலய திருப்பணி வேலைகளை செய்யவும் கும்பாபிஷேக கிரியைகளை செய்ய வும் உதவிய அனைவருக்கும் நடேசன் முருகேசன் திருப்பணிச் சபை சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார். கே. ஈஸ்வரலிங்கம் திதி 9511) வளர்ப்பிறை தேய்பிறை காலங்களில் சில பகுதிகளுக்கு ஒரு கண் மட்டுமே உண்டு என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பயன் தருமா? பூரண பலன் தராது 9512) பூரண பலன் தராத இத்திதிகளில் சுபகாரியங்கள் செய்யலாமா? தவிர்ப்பது நல்லது 9513) வளர்பிறையில் பூரண பலன் தராத திதிகள் எவை? பஞ்சமி, சஷ்டி, சப்தமி, சதுர்த்தி, பெளர்ணமி 9514) தேய்பிறையில் பூரண பலன் தராத திதிகள் எவை? பிரதமை, அஷ்டமி, நவமி, தசமி 9515) பொதுவாக வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே பலரும் தவிர்க்கும் திதிகள் எவை? அஷ்டமி, நவமி 516) ஆகாத திகதிகள் எவை? அமாவாசை, பெளர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும் அடுத்த நாளாக வரும் பிரதமையும் 9517) இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் என்ன நடக்கும்? பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும். 9518) திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயிலியம், பூரம், பூராடம் பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரெண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தவிர்க்கக் கூடிய செயல்கள் எவை? கடன் கொடுப்பது, வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது, கடுமையான நோய் வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது. கலைமகள் 9519) கலைமகள் வெண்ணிற ஆடையுடுத்தி வெண்தாமரையில் வீற்றிருப்பது ஏன்? தூய்மையை உணர்த்தும் பொருட்டு 9520) கலைமகளின் வாகனம் எது? வெண்ணிற அன்னம் 9521) கலைமகளின் கையிலுள்ள வீணையை யார் கொடுத்தது? சிவபெருமான் உருவாக்கி கொடுத்தது. * 9522) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை? கோவணம் கட்டிய மொட்டைத் தலை தண்டாயுத பாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம். தனித்த காளியும் கால கண்டன் படமும் ஆகாது. 9523) சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கலாமா? வைக்கக் கூடாது. 9524) நவகிரகங்களின் படம் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்கலாமா? கூடாது 9525) சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படம் இல்லங்களில் வைக்கலாமா? ஆகாது 9526) ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபாவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் பூஜைக்கு உபயோகிக்கலாமா? ஆகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812