திங்கள், 17 டிசம்பர், 2012

9615 சிவன் எத்தனை தத்துவங்களை கடந்தவர்? 96 9616) முருகப்பெருமான் எத்தனை தத்துவங்களை கடந்தவர்? 36 9617) தாமசாஸ்தா ஐயப்பன் எத்தனை தத்துவங்களை கடந்தவர்? 18 9618) சபரிமலையில் அமைந்துள்ள 18 படிகளில் முதல் ஐந்து படிகளும் எதை குறிக்கின்றன? இந்திரியங்கள் ஐந்தையும் 9619) அடுத்த 8 படிகள் எதனை குறிக்கும்? அஷ்டமா சித்திகளை 9620) 14, 15, 16 வது படிகள் எதனை குறிக்கின்றன? மூன்று குணங்களையும் குறிக்கும் 9621) 17வது படி எதனை குறிக்கும்? ஞானத்தை 9622) 18வது படி எதனை குறிக்கிறது? அஞ்ஞானத்தை 9623) கடவுளை காண கடக்க வேண்டிய 18 படிகளும் எவை? புலன் ஐந்து, பொறி ஐந்து, பிராணன் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, அலங்காரம் ஒன்று 9624) பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரில் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் பெற்றவர் யார்? ருத்ரன் 9625) ருத்ரன் எத்தகைய சக்தி உடையவர்? அழியாத சக்தியும் அனந்த சக்தியும் 9626) இவர் எத்தகைய ஆற்றல் உடையவர்? செயற்கரிய பல காரியங்களைச் செய்யும் பேராற்றல் 9627)’ருத்’ என்றால் என்ன? துக்கம் அல்லது துக்கத்தை விளைவிக்கக் காரணமாயுள்ளது. 9628) ருத்ரன் என்ற பெயர் இவருக்கு எவ்வாறு பொருத்தமாய் உள்ளது. தீயோரை அழ வைக்கின்றான் என பொருள் கொள்வதால் 9629) ருத்ரன் நித்யவாஸம் செய்யும் இடம் எது? திருக்கைலாயம் 9630) பிரம்மன் தங்குமிடம் எது? ஸத்ய லோகம் 9631) விஷ்ணு வீற்றிருக்கும் இடம் எது? வைகுண்டம் 9632) லோக ஸ்ருஷ்டியை செய்பவர் யார்? பிரம்மன் 9633) லோக பரிபாலனத்தை செய்பவர் யார்? விஷ்ணு. 9634) லோக ஸம்ஹாரத்தை செய்பவர் யார்? ருத்ரன் 9635 )ஓம் காரத்தின் பொருள் எது? நமசிவாய 9636) இது ஸப்த கோடி மஹா மந்திரங்களில் முதன்மையானது என்று எதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தில் 9637) ருத்ரன் எத்தகைய தன்மை வாய்ந்தவர்? எங்கும் உள்வர் என்றும் எல்லாமாய் இருப்பவர் 9638) அண்டியவர் பிணிகளைப் போக்குவதால் இவர் எவ்வாறு வர்ணிக்கப்படுகின்றார்? திவ்ய வைத்தியவன் 9639) இவரை வேதாகம இதிஹாச புராணங்கள் எவ்வாறு அழைக்கின்றன? சம்பூ, சங்கரன், பார்வதீபதி, நீலகண்டன், சிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812