திங்கள், 31 டிசம்பர், 2012

கே. ஈஸ்வரலிங்கம் 9770) எண் கோணக் குண்டம் எந்த பாகத்தில் அமைக்கப்படும்? வடகிழக்கு 9671) எண் கோணத்தில் எந்தனை குண்டங்கள் அமைக்கப்படும்? எட்டு 9672) எண் கோணக் குண்டம் யாரைக் குறிக்கும்? சந்திரன் 9673) யாகசாலையில் தென்கிழக்கு பாகத்தில் அமைக்கப்படுவது எந்த குண்டம்? அரசிலைக் குண்டம் 9674) இதனை ஏன் அரசிலைக் குண்டம் என அழைக்கின்றனர்? அரச இலை வடிவத்தில் அமைக்கப்படுவதால். 9675) அரச இலைக் குண்டம் எதனைக் குறிக்கிறது? இயமானன் என்ற ஆன்மா மாயா தத்துவத்தை 9676) யாகசாலையில் தென்மேற்கு பாகத்தில் அமைக்கப்படுவது எந்தக் குண்டம்? முக்கோண குண்டம் 9677) இதனை ஏன் முக்கோண குண்டம் என்று அழைக்கின்றார்கள்? முக்கோண வடிவத்தில் அமைக்கப்படுவதால் 9678) ஆறு கோண வடிவத்தில் குண்டம் அமைக்கப்படுவது எந்த பாகத்தில்? வடமேற்கு 9679) இதனை என்ன கோணம் என்று கூறுவார்கள்? அறுகோணம் 9680) அறுகோணம் எதைக் குறிக்கும்? காற்றை 9681) எட்டு திக்குகளிலும் அமைக்கப்பட்ட குண்டங்களுக்கும் ஈசானத்திற்கும் கிழக்கிற்கும் இடையில் அமைக்கப்படுவது எந்தக் குண்டம்? பிரதான குண்டம் 9682) பிரதான குண்டம் எந்த வடிவில் அமைக்ககப்படும்? வட்டவடிவம் 9683) யாகசாலையின் நான்கு பக்கங்களிலும் என்ன அமைக்கப்படும்? நான்கு கலசங்கள் 9684) இந்த நான்கு கலசங்களும் எதைக் குறிக்கும்? நான்கு கலைகளை 9685) இரண்டு காப்பாளர்களுக்கு என கலசங்கள் வைப்பது எங்கு? வாசலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812