புதன், 26 டிசம்பர், 2012

கும்பாபிஷேகம்

9640) கோயில்களில் தினமும் எத்தனை கால பூசை செய்ய வேண்டும்? ஆறு 9641) பல கோவில்களில் ஆறு கால பூசை செய்வ தில்லை. அந்த குறையை நீக்க என்ன செய்வார்கள்? பிரம்மோற்சவம் 9642) பிரம்மோற்சவம் எப்போது செய்யப்படும்? வருடத்துக்கு ஒரு முறை 9643) பிரம்மோற்சவம் செய்யும் போது ஏற்படும் குறைகளை நீக்க என்ன செய்வார்கள்? கும்பாபிஷேகம் 9644) கும்பாபிஷேகம் எப்போது செய்யப்படும்? பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 9645) வேறு என்ன காரணங்களுக்காக கும்பாபிஷேகம் செய்யப்படும்? கோவில் கட்டி பல வருடங்களாகி இருந்தால் நித்தியபூஜை, நிவேதனம் தடைபட்டு இருந்தால், அஷ்டபந்தன மருந்தின் சக்தி குறைந்து இருந்தால் 9646) கும்பாபிஷேக யாகம் எத்தனை நாட்களுக்கு செய்யப் படும்? ஏழு, ஐந்து, மூன்று, ஒரு நாள் என்ற விதி முறைப்படி நடக்கிறது. 9647) இதை என்ன வென்று சொல்லுவார்கள்? புனராவர்தம் 9648) பிரதிஷ்டைக்கு முதலில் என்ன செய்வார்கள்? பாலஸ்தானம் 9649) பிம்பத்தில் பிளவு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? ஸ்தலகர்ம ஆதார பத்ம பீடம், பிரத்யங்கம் முதலியவற்றை நிவர்த்தி செய்வார்கள். 9650) இதற்கு முதலில் என்ன செய்வார்கள்? நல்ல நேரம் பார்ப்பார்கள். 9651) குண்டங்கள், கம்பங்கள் என்ற அரு உருவ நிலை மாறி, இறைவனின் முழு உருவமும் திருமேனியில் இடம் பெறச் செய்வதை என்னவென்று கூறுவார்கள்? கும்பாபிஷேகம் 9652) இந்த காரியம் நடத்தும் இடத்தை என்னவென்று கூறுவார்கள்? யாகசாலை 9653) யாகசாலை என்ற விதத்தில் ‘ய’ என்பது என்ன? யஞ்ஞம் 9654) ‘க’ என்பது என்ன? செல்லுதல் 9655) ‘ஸ’ என்பது என்ன? சுகம் 9656) ‘ல’ என்பது என்ன? லயம் 9657) எட்டு திக்குகளிலும் யாக சாலையில் என்ன அமைக்கப்படுகிறது? குண்டங்கள் 9658) கிழக்கில் என்ன வடிவமான குண்டம் அமைப்பார்கள்? சதுர வடிவமான 9659) இந்த சதுர வடிவமான குண்டத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? நாற்கோண குண்டம் 9660) இந்த நாற்கோண குண்டம் எதை குறிக்கும்? நிலத்தை 9661) தெற்கில் எந்த வடிவமான குண்டம் அமைப்பார்கள்? நிலா வடிவமான 9662) இந்த குண்டத்தை என்னவென்று சொல்லுவார்கள்? அர்த்த சந்திர குண்டம் 9663) அர்த்த சந்திர குண்டம் எதை குறிக்கும்? நீரை 9664) மேற்கில் எந்த வடிவமான யாகம் அமைக்கப்படும்? வட்டவடிவமான 9665) இந்த வட்ட வடிவமான யாகத்தை என்ன வென்று சொல்லுவார்கள்? விருத்த குண்டம் 9666) விருத்த குண்டம் எதை குறிக்கும்? ஆகாயத்தை 9667) வடக்கு யாகத்தில் எந்த வடிவ குண்டம் அமைக்கப்படும்? தாமரைப்பூ 9668) தாமரைப்பூ வடிவ குண்டத்தை என்ன வென்று சொல்லுவார்கள்? பத்ம குண்டம் 9669) பத்ம குண்டம் யாரை குறிக்கும்? சூரிய பகவானை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812