செவ்வாய், 24 ஜூலை, 2018

கொழும்பில் ஆடிவேல் விழா

கொழும்பு, செட்டியார்தெரு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா நாளை 25ம் திகதி மாலை 6 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி காலை 7.00 மணிக்கு கொழும்பு, செட்டியார் தெரு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவரும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீமுத்துக்குமார சுவாமிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு உள்வீதி வலம் வரும் நிகழ்வுகள் இடம்பெறும். அதனைத் தொடா்ந்து சுவாமி சித்திரத்தேரில் எழுந்தருளி காலி வீதியூடாக பம்பலப்பிட்டி நகருக்கான பவனி ஆரம்பமாகும்.

கொழும்பு, செட்டியார்தொரு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த ரத பவனி மெயின் வீதி, சதாம் வீதி, ஜனாதிபதிபதி மாளிகை, காலி வீதி, அலரி மாளிகை, பம்பலப்பிட்டி வழியாக புதிய கதிா்வேலாயுத சுவாமி கோவிலை சென்றடையும்.

எதிா்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெளர்ணமி தினத்தன்று காலை 10.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இங்கு விசேட பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடா்ந்து பக்தா்களின் தாிசனத்திற்காக முருகப்பெருமான் கதிா்காமத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் காட்சியருள்வார்.

எதிர்வரும் 28ம் திகதி சனக்கிழமை பக்தர்களின் தரிசனத்திற்காக சுவாமி அருள்மிகு ஸ்ரீகதிர்காம முருகன், பலம்பலபிட்டி ஆலயத்தில் எழுந்தருளி இருப்பார்.

எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு ரத பவனி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் சுவாமி ஆலயத்திலிருந்து புறப்படும் ரத பவனி பம்பலப்பிட்டி வழியாக காலி வீதியூடாக காலிமுகத்திடல், சதாம் வீதி, ஸ்ரீகதிரேசன் வீதி, செட்டியார் தெரு ஊடாக நள்ளிரவு 12.00 மணியளவில் ஆலயத்தை வந்தடையும்.


கொழும்பு நகரில் ஆடி வேல் விழா பன்னெடுங்காலமாக மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தொடங்கப்பட்டபோது, ஆடி மாதத்தில் கம்பளை, காலி, இரத்தினபுரி, பதுளை, கண்டி, கொழும்பு முதலான இடங்களிலிருந்து கதிர்காமத்திற்கு வேல் கொண்டு செல்லப்பட்டு மாபெரும் விழாவாக நடைபெற்றது. பிற்காலத்தில் கதிர்காமத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய், கலகம் ஆகியவற்றால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. அன்று முதல் கொழும்பில் இருந்து கொண்டு வரப்படும் வேலை மட்டும் வைத்து கதிர்காமத்திலேயே ஆடி வேல் விழா கொண்டாடுகிறார்கள்.
இதையொட்டி வேல் தாங்கிய விமலனான முருகப் பெருமானுக்கு உண்டானதே ஆடிக் கார்த்திகை விழா. முருகப் பெருமானுக்கு, திதிகளில் சஷ்டி திதி, கிழமைகளில் வெள்ளி, நட்சத்திரங்களில் கார்த்திகை என விரதங்கள் உண்டு. நட்சத்திர விரதமான கார்த்திகையில் ஆண்டு முழுவதும் வரும் எல்லா கார்த்திகைகளும் சிறப்பு வாய்ந்தவைதான். ஆனால் தட்சிணாயனம் துவங்கும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக்கார்த்திகையும் உத்தராயனம் துவங்கும் தை மாதத்தில் வரும் தைக் கார்த்திகையும் மிகவும் சிற்பபு வாய்ந்தவை. அந்த இரண்டிலும் மழைக்காலம் துவங்கும் மாதமான ஆடிமாதக் கார்த்திகையே முருகப் பெருமானுக்கு மிகவும் சிறப்பானதாகும்.


கொழும்பு நகரில் மேள தாளங்கள் முழங்க கரகம், காவடி ஆட்டம் சகிதம் முருகப் பெருமானுன் வேல் வீதியுலா வந்து அருள்பாலிக்கும் காட்சி கண்கொள்ளக் காட்சியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812