வியாழன், 18 ஜூலை, 2019

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா எப்போது கொண்டாடப்படுகிறது?

ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

இது யாருக்குரிய திரநாள்?

தேவிக்குரிய திருநாளாகும்.

இந்த நாளில் உள்ள சிறப்பு என்ன?

இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.

அம்பாள் உருவெடுத்தது எதற்காக?

உலக மக்களை காக்க

இந்நாளில் உள்ள சிறப்புக்கள் வேறு என்ன?

சித்தர்களும் யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு ஆடிப்பூரத்தன்று என்ன நடக்கும்? வளை காப்பு நடக்கும்

ஆடி மாதம் என்பது எந்த காலத்தின் தொடக்க காலம்?

தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம்.

இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது எது? சூரியன்

சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம் எது ?

ஆடி

நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு எத்தனை நாள்?

ஒரு நாள்.

அவர்களது இரவுக்காலம் எது?

இந்த தக்ஷிணாயன காலம் ஆகும்.

உத்தராயணக்காலம் யாரை வழிபட உகந்தது?

சிவபெருமானை வழிபட உகந்தது

உத்தராயணக் காலம் சிவனை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் யாரை வழிபட உகந்தது? அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812