வியாழன், 18 ஜூலை, 2019

சாய் பாபா அருள்


சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு.

சிட்டுக்குருவியின் காலில் கயிற்றை கட்டி இழுப்பது போல பக்தர்களை என் பக்கம் இழுப்பேன் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வதுண்டு. அதை உறுதிபடுத்துவது போல சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு. சிலருக்கு பாபாவை பற்றி துளி அளவு கூட எந்த விஷயமும் தெரிந்திருக்காது. ஆனால் அவர்களை மிகக்குறுகிய காலத்தில் சாய்பாபா தனது அதிதீவிர பக்தனாக மாற்றி இருக்கிறார்.

அவர்களில் சீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைத்து தி.நகரில் ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான -பிரார்த்தனை மையம் நடத்தி வரும் பேராசிரியர் திருவள்ளுவன் வித்தியாசமானவர்.

இதுபற்றி பேராசிரியர் திருவள்ளுவன் கூறியதாவது:-

2001ம் ஆண்டு கல்லூரியில் என்னுடன் பணிபுரிந்த சாய்ராம் என்பவர் என்னை சீரடிக்கு அழைத்தார். அவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர். சாய்பாபா மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அவருடன் நானும் எனது மனைவியும் சீரடிக்கு சென்றோம்.

சீரடியில் பாபாவின் சமாதி மந்திருக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு நிறைய பேர் அமர்ந்து பாபாவை புகழ்ந்து பாட்டுபாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்தேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. பாபா சமாதியில் வழிபட்ட பிறகு சென்னைக்கு திரும்பிவிட்டோம். அதன் பிறகு நான் பாபாவை சுத்தமாக மறந்து விட்டேன்.

நானும் அதை ஏற்றுக் கொண்டேன். சீரடி சாய்பாபா பற்றிய புத்தகங்களை தேடி தேடி சேகரித்தேன். பாபாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்க படிக்க ஆச்சரியமாக இருந்தது. அவர் மெல்ல மெல்ல என் மனதுக்குள் ஊடுருவினார். அந்த சமயத்தில் கல்லூரி முதல்வர் நான் சீரடி சென்று பாபா ஆலயத்தில் உள்ள நூலகத்தில் புத்தகங்கள் பெறுவதற்கு அனுமதி வழங்கினார். அதன் பேரில் நான் சீரடி செல்ல முடிவு செய்தேன். அப்போது பாபா ஒரு அதிசயம் நிகழ்த்தினார்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நான் சீரடி செல்வதை அறிந்து என்னை பார்க்க வந்தார். அவர் என்னிடம், “சீரடியில் இருந்து ஷிண்டே என்பவர் வந்திருக்கிறார். அவருடன் சீரடிக்கு செல்லுங்கள். உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அவர் பார்த்துக் கொள்வார்” என்று கூறினார். அதன்படி ஷிண்டேவுடன் நானும் நண்பர் பல்லவ ராஜாவும் சீரடிக்கு சென்றோம். அங்கு சாய்பாபா ஆலயத்தின் பி.ஆர்.ஒ. லட்சுமன் சகானே எனக்கு அறிமுகமானார்.

லட்சுமன் சகானே என்னை அவரது வீட்டுக்கும் அழைத்து சென்று பாபா பற்றிய புத்தகங்கள் கொடுத்தார். பிறகு சமாதி மந்திருக்குள் சென்று சாய்பாபாவை வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்தார். சமாதி மந்திரில் பாபா சிலை அருகே வெள்ளித்தூண் பகுதியில் நின்று நான் பாபாவை வழிபட்டேன். அப்போது பாபாவுக்கு நடந்த ஆரத்தி பூஜையில் மெய் மறந்தேன்.

அன்று இரவு என் வாழ்க்கையில் மேலும் ஒரு அதிசயத்தை பாபா நிகழ்த்தினார். என்னுடன் வந்திருந்த பல்லவராஜா தான் கொண்டு வந்திருந்த பாபா படத்தை காண்பித்து இதே போன்று இன்னொரு படம் வேண்டும் என்று சீரடி முழுக்க தேடினார். நாங்கள் அப்துல் பாபா காட்டேஜுக்கு சென்று விசாரித்தோம். அப்போது அங்கு இருந்த அப்துல் பாபாவின் கொள்ளு பேரன் “இரவு 10 மணிக்கு வாருங்கள் தருகிறேன்” என்று கூறினார்.

அவர் சொன்னபடி நானும், எனது நண்பரும் இரவு 10 மணிக்கு அப்துல் பாபா வாழ்ந்த வீட்டுக்கு சென்றோம். எங்களை கண்டதும் அவரது கொள்ளு பேரன் கனிபாய் உள்ளே அழைத்து சென்றார். ஒரு கதவை திறந்து பழைய இரும்புபெட்டியை எடுத்து வந்தார். அந்த பெட்டிக்குள் பாபா தினமும் 5 வீடுகளில் பிச்சை எடுக்க பயன்படுத்திய பாத்திரம், சட்கா ஆகியவை இருந்தன. அவற்றை தொட்டு வணங்க சொன்னார். எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. சாய்பாபா மகா சமாதி அடைந்ததும், அவர் பயன்படுத்திய பொருட்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற 7வது நபர் நீங்கள் என்றார்கள். நான் ஆடிப்போய் விட்டேன்.

ஆச்சரியத்தில் மூழ்கி இருந்த எனக்கு பாபா மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தார். அந்த சூட்கேசுக்குள் இருந்த பிச்சைப்பாத்திரத்துக்குள் கிடந்த ஒரு நாணயத்தை எடுத்து கனிபாய் எனக்கு கொடுத்தார். அது பாபா பயன்படுத்திய நாணயம் ஆகும். அந்த நாணயத்தை தொட்ட வினாடியே நான் பாபாவிடம் முழுமையாக என்னை ஒப்படைத்துவிட்டேன். பாபா என்னை தூண்டில் போட்டு இழுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812