வியாழன், 25 ஜூலை, 2019

அவிசாவளை குடகம ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்


மலையகத்தின் நுழைவாயில் என கூறப்படும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அவிசாவளை நகரின் குடகம வீதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்த அலங்கார உற்சவம் 31.07.2019 புதன்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூலமூர்த்திபூசை, வசந்த மண்டப பூசை இடம்பெற்ற பின்பு இரவு 7.30 மணிக்கு தீச்சட்டியுடன் ஸ்ரீவிநாயப் பெருமானும், ஸ்ரீமுத்துமாரியம்மனும் வெளிவீதி உலாவருதல் இடம்பெறும்.

01.08.2019 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு புவக்பிட்டிய திருவருள் மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட பவனி ஆரம்பமாகி அந்த பால்குட பவனி கோவிலை வந்தடைந்த பின்பு 108 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூலமூர்த்தி பூசை, வசந்த மண்டப பூசை நடைபெற்று அதன் பின்பு வேட்டைத் திருவிழா இடம்பெறும்.

02.08.2019 மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்பட்டு விநாயகர் வழிபாட்டுடன் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின் மாலை 6 மணிக்கு மூலமூர்த்தி பூசை, வசந்த மண்டப பூசை இடம்பெற்று அதன் பின்பு இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.

03.08.2019 நான்காம் நாள் சனிக்கிழமை தேர் கோவிலை வந்தடைந்ததும் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெற்று அதன் பின்பு பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெற்ற பின்பு தீ மதிப்பு இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூல மூர்த்தி பூசை, மாவிளக்கு பூசை, திருவூஞ்சல் பூசை ஆகியன இடம்பெறும்.

04.08.2019 இறுதி நாளான ஐந்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வைரவர் பூசையுடன் படையல பூசை இடம்பெற்று மகோற்சவ கிரியைகள் நிறைவுபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812